சாய் ரோஷன் கே ஆர் இயக்கத்தில்
ஷாரிக் ஷாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்… இந்த ஏழு பேரும் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்து மற்றும் ஆனந்த், செல்வா, பாலா என நடித்து வெளியாகியிருக்கும் படம் நேற்று இந்த நேரம்.
கதை
நண்பர்கள் நான்கு இளைஞர்கள், மூன்று இளம்பெண்கள் என ஏழு பேர் ஒன்றாய் சேர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா போகிறார்கள் சுற்றுலா சென்ற இடத்தின் ரெசார்ட்டில் அனைவரும் தங்குகின்றனர். சுற்றுலா வந்திருக்கும் நண்பர்களில் நிகில் காணாமல் போகிறார். இதை போலிஸ் அதிகாரி சுற்றுலா வந்த நண்பர்கள் ஒவ்வோருவரையும் தனியாக அழைத்து விசாரணை செய்கிறார். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ரோகித் என்பவரும் காணாமல் போகிறார். காணாமல்போன இருவரும் பிணமாக கிடைக்கிறார்கள். நிகில் ரோகித்தை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்?
இது ஒருபக்கமிருக்க சீரியல் கில்லர் ஒருவன் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொலைகள் செய்வது, அந்த கொலை பற்றி போலீஸாருக்கு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தகவல் கிடைப்பது என கதைக்களம் சூடுபிடிக்கிறது… இப்படி செல்லும் கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது
என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹீரோக்களில் ஒருவராக வருகிற ‘பிக் பாஸ்’ ஷாரிக் ஹாசன் எந்த நேரமும் போதையில் மிதக்கிறார்; சூதாட்டத்தில் நண்பர்களை வீழ்த்தி சுகம் காண்கிறார். தான் காதலிப்பதாய் நம்பி பழகுகிறவர்களை அனுபவித்து கழட்டி விடுவதில் பொருத்தமான மெல்லிய வில்லத்தனம் காட்டி அருமையாக நடித்திருக்கிறார்.காவல்துறை அதிகாரியாக வருபவர் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது விசாரணையும் உண்மையைக் கண்டுபிடிக்கும் விதமும் நம்மை ரசிக்கவைக்கிறது.
மற்றும் இதில் நடித்த ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், ஆனந்த், செல்வா, பாலா என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
கெவின் என்னின் பிண்ணனி இசை ரசிக்க வைக்கிறது. ஊட்டியின் பச்சைப்பசேல் பியூட்டியை அழகாக படம் பிடித்திருக்கிறார் விஷால் எம்.
காட்சிக்கு காட்சி பரபரப்பான திருப்பங்களுடன் திரைக்கதையமைத்து எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் சாய் ரோஷன் கே ஆர். பாராட்டுக்கள். திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து.