பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் தயாரிப்பாளர் திரவ், இஸ்மத் பானு, எம்.எஸ். பாஸ்கர், ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்து மார்ச் 29 ல் வெளியாகும் படம் வெப்பம் குளிர் மழை.
கதை
கதாநாயகன் திரவ் கதாநாயகி இஸ்மத் பானு இருவரும் கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால் மருந்துவமனைக்கு செல்கின்றனர். கணவனுக்கு குறை என்று டாக்டர் பானுவிடம் சொல்கிறார். பானு கணவனிடம் சொன்னால் கஷ்டப்படுவார் என மறைத்து சூழ்நிலை சந்தர்ப்பத்தால் கணவன் மாமியாருக்கு தெரியாமல் டாக்டர் அறிவுறுத்தலின்படி டெஸ்ட் டியூப் மூலம் ஆண்குழந்தைபெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்திற்க்குமேல் கணவன் திரவ்க்கு உண்மை தெரிய வருகிறது. தனக்கு பிறக்காத குழந்தையைக் கொல்ல முயல்கிறார். இதனால் கணவன் ம னைவிக்குள் பிரச்சினை எழுகிறது. இதன் பிறகு கணவன் மனைவி ஒன்று சேர்ந்தார்களா? தனக்கு பிறக்காத குழந்தையைகொன்றாரா? மகனாக ஏற்றுக் கொண்டாரா? முடிவில் கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டார்களா?இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாகதிரவ்வும் கதாநாயகியாக இஸ்மத் பானுவும் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மாமியாராக ரமாவும் சிறப்பாக நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மாஸ்டர் கார்த்திகையன் நன்றாக நடித்துள்ளார். தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
பிரித்வி ராஜேந்தரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். ஷங்கர் ரங்கராஜனின் பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து கணவன் மனைவி இருவரும் மனதை ஒருநிலைபடுத்திசந்த சந்தோஷமாக இருந்தாலே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார்.பாராட்டுக்கள். அனைவரும் பார்க்கவேண்டிய படம்.