இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி, சுபாஷ் செல்வன், கவுரி கமிஷன், அம்மா அபிராமி, ஜனனிஅய்யர்,சோபி மற்றும் பலர் நடித்து மார்ச் 29ல் வெளியாகும் படம் Hot Spot.
கதை
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தயாரிப்பாளரிடம் ஒவ்வொரு கதையாக 4 கதைகள் சொல்கிறார். முதல் கதையில் வழக்கமாக ஆண்கள்தான் பெண்களுக்கு தாளிகட்டுகிறார்கள். பெண் ஆணுக்கு தாலிகட்டினால் என்னவாகும் என்பதையும் பிறந்த வீட்டில் பெண் ராணியாக வாழ்கிறார்கள். ஆனால் புகுந்த வீட்டில் ராணி மாதிரிதான் வாழ்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கதையில் அம்மு அம்மு அபிராமியும் சாண்டி மாஸ்டரும் காதல் செய்கிறார்கள். அம்மு அபிராமி வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ள வைக்கிறார் சாண்டி வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். காரணம் இருவரும் அண்ணன் தங்கை முறை. காதலர்களான சாண்டி அம்மு அபிராமி நிலை என்ன என்பது இரண்டாவது கதை
மூன்றாவது கதை
கதாநாயகன் ரிப்போர்ட்டரான கதாநாயகியை காதலிக்கிறான். சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஜடி வேளையை விட்டு கால்பாயாக மாறுகிறான். இந்த விஷயம் காதலிக்கு தெரியவரும்போது காதலி என்ன முடிவெடுகிறாள்?
என்பது கதை
நான்காவது கதை TV ஷோக்களில் சிறுவர்களை எப்படி நடிக்க பயன்படுத்த வேண்டும், பெற்றவர்கள் ஆசையால் குழந்தைகள் மன நிலை எப்படி என்பதையும் கலையரசன் பேமிலி வாழ்க்கை மூலம் உணர்வுப் பூர்வமாக சொல்லியிருப்பது நான்காவது கதை
நான்கு கதையும் தயாரிப்பாளரிடம் சொல்லி
கதை சொல்ல வந்த இயக்குநர் தயாரிப்பாளர் மகளை காதலித்த விஷயத்தை சொல்லி எப்படி கதலுக்கு சம்மதம் வாங்கினார் என்பது சுபம்.
4 கதைகளிலும் நடித்த ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன், சாண்டி அம்மு அபிராமி, சுபாஷ் செல்வம் ஜனனி அய்யர், கலையரசன், சோபி என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
கோகுள் பினேயின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சதீஷ் ரகுநாதன், வான் இருவரின் இசை படத்தை ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் 4 கதைகளையும் உணர்ச்சிப்பூர்வமாகவும், காமெடியாக கலகலப்பாக எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.