Pavaki Entertainment Pvt Ltd சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா, ராதாரவி, ஜெகன், பாலாஜி சக்திவேல் நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக மார்ச் 29 ல் வெளியாகவுள்ள படம் ‘இடி மின்னல் காதல் ’.
இசை சாம் CS
ஒளிப்பதிவு ஜெயசந்தர்
கதை
கதாநாயகன் சிபி கதாநாயகி பவ்யா த்ரிகாவுடன் காரில் வரும்போது தன்னிலை மறந்து கதாநாயகிக்கு முத்தம் கொடுக்கும்போது ரோட்டில் வந்த ஹிருதேஷ் என்பவர்மீது கார் ஏறி ஹிருதேஷ் இறந்துவிடுகிறார். சிபி us செல்ல இருப்பதால் இந்த கொலையில் இருந்து இருவரும் தப்பிக்க கதாநாயகி சிபியை ஸ்பாட்டிலிருந்து அனுப்பிவிட்டு ரோட்டில் ஆக்ஸிடென்ட் ஆகி ஒருவர் இறந்து கிடப்பதாக போலிஸ்க்கு பவ்யா த்ரிகா தகவல் கொடுக்க ஸ்ப்ட்டுக்கு போலிஸ் வர அந்த கொலைக்கு கதாநாயகி விட்னஸ் ஆக போலிஸ் யார் ஆக்சிடென்ட் செய்தார்கள் என்ற விசாரனையில் இறங்க உண்மையிலேயே ஆக்ஸிடென்ட் செய்த கதாநாயகன் சிபி கதிநாயகி பவ்யா த்ரிகா போலிஸிடம் மாட்டிக் கொண்டார்களா?இல்லையா? கதாநாயகன் சிபி Us சென்றாரா? இல்லையா? இறந்த ஹிருதேஷ் யார்? இவரிடம் பாசமாக இருக்கும் ஒரே மகனின் நிலமை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை
கதாநாயகனாக சிபி சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகி பவ்யா த்ரிகா அழகாலும் நடிப்பாலும் கவர்கிகிறார்.
சிறுவனாக நடித்துள்ள ஜெ ஆதித்யா நன்றாக நடித்துள்ளார். யாஸ்மின் பொன்னப்பாவின் நடிப்பும் அருமை. மெக்கானிக்காக ஜெகன் சிறப்பாக நடித்துள்ளார். ராதாரவி, பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் என இதில் நடித்திருக்கும் அனைவருமே கொடுத்த கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள். ஜெயசந்தரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சாம் சி.எஸ்ஸின் பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
இயக்குநர் பாலாஜி மாதவன் ஒரு ஆக்ஸிடென்ட் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதை எல்லோரும் ரசிக்கும்படி திரைக்கதையமைத்து சுவாராஸ்யமாககொடுத்துள்ளார்பாராட்டுக்கள்