இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கும் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் நிகேஷ் இயக்கி திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் ரெபல்.
மமிதா பைஜூ, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
கதை
80 களில் கேரளாவை பின்னணியாக வைத்து, மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் பிள்ளைகள் பாலக்காடு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போது மாணவர்கள், மாணவிகள் போராடும் அவல நிலையை சொல்லியிருப்பதே படத்தின் கதை.
மூணாறில் இருந்து கேரளாவுக்கு படிக்க ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆதித்யா, வினோத் செல்கின்றனர். அங்கே ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை தமிழர்களை இழிவாக நடத்துகின்றனர். ஆனால், மலையாள ஹீரோயினான மமிதா பைஜுவுக்கும் ஹீரோவுக்கும் காதல் டிராக் ஓடுகிறது. இடைவேளைக்குப் பிறகு தங்களை மட்டம் தட்டும் மலையாளிகளை எதிர்த்து ஹீரோவும் அவரது நண்பர்களும் திருப்பி பதிலடி கொடுத்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
80களில் நடைபெற்ற நிஜமான சம்பவத்தை அடிப்படையில் கொண்டு தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ்
புரட்சிகரமான கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார்என்பதைவிட கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகி மமிதா பைஜூ அழகாலும் நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.
மற்றும் இதில் நடித்திருக்கும் கருணாஸ், ஆதித்யா, கல்லூரி வினோத் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். வில்லன் கதாபாத்திரம் பவர்புல்லாக உள்ளது. சிறப்பாக வில்லன்கள் நடித்திருந்தார்கள் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சூப்பர். சித்து, ஜீவிபிரகாஷ், அஃப்ரோவுக்கு வாழ்த்துக்கள்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இளைஞர்களை கவரும் வண்ணம் சுவாரஸ்யமாக அனைவரும் ரசிக்கும்படி வெற்றிபடமாக கொடுத்துள்ளார் இயக்குனர் நிகேஷ். பாராட்டுக்கள்