Take a fresh look at your lifestyle.

Kaduvetti Movie Review

38

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆர் கே சுரேஷ். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் காடுவெட்டி. இந்த படத்தை இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கியிருக்கிறார். மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு வணக்கம் தமிழா இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காடுவெட்டி. தற்போது திரையரங்குகளில்வெளியாகியிருக்கிறது

கதை

நகரத்தில் காதலை மக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், கிராமத்தில் எவ்வாறு காதலை அணுகின்றனர் என்பதை மையமாக வைத்து காடுவெட்டி படத்தில் கதையாக சொல்லியிருக்கிறார்கள். நகரத்தில் உள்ள மக்களுக்கு போதுமான கல்வி அறிவும் பொருளாதார மேம்பாடும் இருப்பதால் நகரத்தில் பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்கின்றனர் எனக் கூறி நகரத்து காதல் கதையை முடிக்கின்றார் இயக்குநர்.

இதே காதலை கிராமத்து காதல் கதையாக காதலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல், காதலர்களின் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை விளக்கியிருக்கிறார் இயக்குநர் .

குறிப்பாக நகரத்து காதல் கதையில் பெற்றோர்கள் மட்டும் கலந்து பேசி தங்களது குழந்தைகளின் காதல் திருமணத்தில் முடிய பக்கபலமாக நிற்கின்றனர். ஆனால் கிராமத்து காதல் கதையில், காதலுக்கும் காதலர்களுக்கும் சம்பந்தமில்லாத ஊர்கார்களால் அந்த காதலும் காதல் செய்யும் பெண்ணின் குடும்பமும் எவ்வாறு சிரமங்களை எதிர்கொள்கின்றது என்பதை கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் கதாநாயகனான சுரேஷ் தான் சார்ந்த சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகளை தீர்க்கும் நபராக வருகின்றார். ஆர்.கே.சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார். மற்றும்
இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்
வணக்கம் தமிழா சாதிக் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். நன்றாக செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவும் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவரது பார்ட்டும் நன்றாக இருந்தது.

இயக்குநர் சொலை ஆறுமுகம் எடுத்துக் கொண்ட சாதிக் காதல் கதையை சுவாராஸ்யமாகசொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.