விஜய் சந்தர் தயாரிப்பில் சபரி,குருசரவணன் இருவர் இயக்கத்தில் ஹன்சிகா, சுரேஷ்மேனன்,ஸ்ரீராம், மொட்டை ராஜேந்திரன். தங்கதுரை மற்றும் பலர் நடித்து மார்ச் 8ல் வெளியாகியிருக்கும் படம் கார்டியன்.
கதை
நான்கு மந்திரவாதிகள் பழிவாங்கத் தேடும் ஒரு கோபமான ஆவியைப் பிடிக்க முயல்வதுடன் கதை தொடங்குகிறது. அந்த ஆவி பழிவாங்க நினைக்கும் நான்கு மனிதர்களின் இரத்தத்தால் அவர்கள் ஆவியை கவர்ந்து ஒரு படிகத்திற்குள் அடைத்து வைக்கிறார்கள். படிகத்தின் மீது இரத்தத்தை சிந்தும் எவரும் ஆவியின் கட்டுப்பாட்டைப் பெறுவார்கள், மேலும் அவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேறும் இருப்பினும், படிகம் உடைந்தால், மரணம் ஏற்படும்.இப்படி இருக்கும் சூழ்நிலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராசியில்லாத அபர்ணா (ஹன்சிகா) ஒரு இன்டீரியர் டிசைனர், தனது பணியிடத்திற்குச் செல்லும்போது கட்டுமான வளாகத்தில் நடந்து செல்லும் போது, கட்டிட தளத்தில் பலகையில் உள்ள ஆணியை தெரியாமல் மிதித்துவிடுகிறாள். அவள் காலில் இருந்து ரத்த துளிகள் படிகத்தின் மீது விழுந்து, படிகத்தில் உள்ள ஆவியை ஹன்சிகாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது அதுமுதல் ஹன்சிகா சொன்னது அல்லது நினைப்பது நிஜமாகிறது என்பதை உணர்ந்து சைக்கிரியாடிஸ்ட்டாக்டரிடம் நடந்ததை சொல்கிறாள். தான் கொண்டு வந்த தன் வீட்டில் இருக்கும் ஸ்படிகமே அதற்குக் காரணம் என்பதையும் உணர்கிறாள் அவள் என்ன செய்கிறாள் என்பதை உணராமல், அவள் படிகத்தை வீசுகிறாள், படிகம் உடைந்து, ஆவி வெளியே வருகிறது.. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கார்டியன் படத்தின் மீதிக்கதை.
அபர்ணாவாக ஹன்சிகா சிறப்பாக நடித்துள்ளார். ஆரம்ப கட்டங்களில் எளிமையான, அப்பாவியான, ராசியில்லாத பெண்ணாக அவரது நடிப்பு சிறப்பு. குழந்தையும் நன்றாக நடித்துள்ளது. வில்லன்களாக நடித்திருக்கும் ஸ்ரீமன், சுரேஷ் மேனன், பிரதீப் ராயன், ஸ்ரீராம் நன்றாக நடித்துள்ளார்கள். மேலும் தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன் என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த ஹாரர் த்ரில்லருக்கு சக்திவேலின் காட்சியமைப்பு உதவியிருக்கிறது. குறிப்பாக படத்தின் பிற்பாதியில் அவரது பணி பாராட்டுக்குரியது. சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில், கார்டியன் ஒரு நல்ல ஹாரர் த்ரில்லர் படமாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார்கள் இயக்கநர்களான சபரி-குரு சரவணன். பாராட்டுக்கள்.