6.2 , வணக்கம் தலைவா நீ வேணுண்டா செல்லம், ஓரம்போ, வாத்தியார்,
கந்தா போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்து பிப்ரவரி 23ல் வெளியாகும் படம் ‘பாம்பாட்டம்’
இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ‘திருட்டு பயலே’, ‘நான் அவனில்லை’ புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா, ஷக்தி சரவணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.
கதை
பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம்தான். அதுபோல ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான் ‘பாம்பாட்டம்’. அந்த சாம்ராஜ்யம் சந்திக்கும் ஏற்ற, இறக்கங்கள்தான் படத்தின் கதை
ஜீவனும் சுமனும் நண்பர்கள். போலிஸ் துறையில் வேலை செய்கின்றனர். சுமன் மகள் காணாமல்போக அவரை தேடும் முயற்சியில் ஜீவன் இறங்க ஜீழனை கொலை கேஸில் சிக்கவைக்க முயல அந்த கொலை பழியை மகன் ஜீவன் ஏற்றுக் கொண்டு சிறைக்கு செல்கிறார். சிறையில் மங்கம்மா தேவி ஜோதிடத்தை மதிக்காததால் ஜோதிடர் சொல்லியபடி பாம்பு கடித்து இறக்கிறார். இதனால் மகள் நாகதேவிக்கு நாகதோஷம் இருப்பதால் சிறிதுகாலம் நியூசிலாந்தில் இறுக்கும் சூழ்நிலை சில காலத்திற்கு பிறகு அரண்மனைக்குவருகிறார். அவரும் பாம்பு கடித்து இறக்கிறார். மங்கம்மாதேவி அரண்மனைக்கு சென்றவர்கள் பாம்பு கடித்து இறந்து விடுகிறார்கள் என்ற கதையை அறிகிறார். மகன் ஜீவன். ஜாமீனில் வெளியே வருகிறார். காவல்துறை தந்தை ஜீவனை அரண்மனையில் என்ன நடக்கிறது என்பதை அறிய டிரான்ஸ்பர் செய்கிறார்கள். அப்பா ஜீவன் அரண்மணைக்குசென்றால் ஆபத்து ஏற்பட்டு விடும் என பயந்து மகன் ஜீவன் அப்பா ஜீவனை வீட்டில் பூட்டி காதலியை காவலுக்கு வைத்துவிட்டு அரண்மணைக்குசெல்கிறார். அரண்மணை ரகசியத்தை அறிய சென்ற மகன் ஜீவன் பாம்பிடம் மாட்டி செத்தாரா? இல்லையா? ஆபத்தை நோக்கி செல்லும் மகன் ஜீவனை அப்பா ஜீவன் காப்பாற்றினாரா? இல்லையா? அரண்மணைக்குள் என்னதான் நடக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஜீவன் இரட்டை வேடங்களில் அப்பா மகனாக சிறப்பாக நடித்துள்ளார். மல்லிகா ஷெரவத் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சுமன் நன்றாக நடித்துள்ளார். மற்றும்
ரித்திகாசென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா, ஷக்தி சரவணன் என இதில் நடித்த அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட
கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்
இனியன் J ஹரிஷ்ஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
அம்ரிஷ் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் வடிவுடையான் சொல்ல வந்த கதையை மிகவும் பிரம்மாண்டமாக ஆக்ஷன் கலந்து எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.