இயக்குநர் ஜான்கிளாடி இயக்கத்தில் சையத் மஜீத் மேஹனா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் கார்த்திக் பிரசன்னா, பிரான்ஸிஸ் கிருபா ராஜன் மற்றும் பலர் நடித்து பிப்ரவரி 23 வெளியாகும் படம் பைரி
கதை
நாகர்கோவிலில்உள்ள அறுகுவிளை கிரமத்தில் புறாபந்தயம் காலம் காலமாக நடந்து வருவதும் அதனால் சிறுபசங்க முதல் பெரியவர்கள்வரை பல உயிர் போவதும் பல கூடும்பங்களின் வாழ்க்கை சீறழிவதும் தொன்று தொட்டு நடந்து வருவது. புறா பந்தயத்தில் குடும்பத்தை பறி கொடுத்த தாய் தன் மகனை (சையத் மஜீத்) படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப நினைக்கிறார் மகனோ தாயின் பேச்சை கேட்காமல் படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்தாமல் அரியர் வைத்துக்கொண்டு தாயின் பேச்சை கேட்காமல் புறாக்களை வளர்த்து போட்டியில் கலந்து கொள்கிறார். இந்த புறா போட்டியில் ஜெயித்தாரா? இந்த போட்டியால் என்ன விளைவுகள் உண்டானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சையத் மஜீத் கதாநாயகனாக கொடுக்கப்பட்டகதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். மற்றும் இதில் நடித்திருக்கும்
மேஹனா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த், கார்த்திக் பிரசன்னா, பிரான்ஸிஸ் கிருபா, ராஜன் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.
A V வசந்தகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். அருண் ராஜின் இசை ரசிக்க வைக்கிறது.
ஒரு அம்மாவுக்கும் பையனுக்கும் இடையேயான பாசப் போராட்டங்களை பந்தயப் புறா வளர்ப்பின் பின்னணியில் சுவாராஸ்யமாகதிரைக்கதையமைத்து ஆக்ஷனும் எமோஷனுமாக சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ள இயக்குநர் ஜான் கிளாடிக்கு வாழ்த்துக்கள்.