Take a fresh look at your lifestyle.

Lal Salaam Movie Review

37

தனுஷ் நடித்த 3 கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்துடன் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், கபில் தேவ், நிரோஷா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் லால் சலாம். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார்.

கதை

மூரார்பாத் கிராமத்தில் தேர்தல் சமயத்தில் இந்து, முஸ்லிம் மக்கள் மாறி மாறி நின்று வெற்றி பெற்று ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் கட்சியின் தலைவர் இவர்களின் ஒற்றுமையை குலைத்து தன் கட்சியின் செல்வாக்கை நிலை நாட்ட மத பிரச்சினையை விஷ்ணு விஷால் விக்ராந்த் கிரிக்கெட் போட்டி மூலம் ஏற்படுத்துகிறார்.அவர் போட்ட பிளான்படி இந்து முஸ்லிம் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை ரஜினிகாந்த் எப்படி கையாண்டு மறுபடியும் இந்து முஸ்லீம்க்குள் ஒற்றுமை ஏற்படுத்தி ஊரை பழைய நிலைமைக்குகொண்டு வருகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இல்லை என்றால் லால் சலாம் இந்த அளவுக்கு சுவாரஸ்மாக இருந்திருக்காது. படத்தில் நடித்த செந்தில், தம்பி ராமையா, ஜூவிதா,நிரோஷா என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஷ்ணு விஷாலின் நடிப்பு அற்புதம். விக்ராந்த் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.விஷ்ணு விஷாலின் காதலியாக நடித்தவரின் நடிப்பும் சிறப்பு.

படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கிறது. பிண்ணனி இசை சுமார்.

மூரார்பாத் கிராமம், இஸ்லாமியர் – இந்துக்கள் ஒற்றுமை, அதன் பின் மோதல், விஷ்ணு விஷாலின் கதை, அவரின் காதல், இரண்டு கிரிக்கெட் டீம்கள், ரஜினிகாந்த், அவர் மகன் விக்ராந்த், அவரின் கிரிக்கெட் கனவு, திருவிழா தேர், அதன் பிரச்னை… என எக்கச்சகமான கிளைக்கதைகள் திரையில் வேகமெடுத்து ஓடி, சிக்கித் திணறுகிறது திரைக்கதை.
சுவாராஸ்யம் இல்லாமல் நீண்டு கொண்டு செல்கிறது கதை.

விளையாட்டை மையமாக வைத்து அரசியலையும் மதபிரச்சினையும் கலந்து சுவாராஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பாராட்டுக்கள்.