Take a fresh look at your lifestyle.

மறக்குமா நெஞ்சம் திரைவிமர்சனம்

36

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பளாராக பணியாற்றிய ரக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் மறக்குமா நெஞ்சம். ரா.கோ. யோகேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரக்சன் உடன் இணைந்து மெலினா, தீனா, ராகுல் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்

கதை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 2008 ஆம் ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்புத் தேர்வில் முறைக்கேடு நடந்ததாக 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
அத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அத்தேர்வை எழுதிய மாணவர்கள் மீண்டும் அப்பள்ளிக்குச் சென்று, மூன்று மாதம் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் மீண்டும் தன் பள்ளிக் காதலி பிரியதர்ஷினியைப் (மலினா) பார்க்கலாம் என்ற ஆசையோடு இருக்கும் கார்த்திக்கும் (ரக்சன்), மூன்று மாதம் வேலையும் சம்பளமும் போகிறதே என்ற கவலையோடு இருக்கும் சலீமும் (தீனா), இன்ன பிற முன்னாள் மாணவர்களும் மீண்டும் அதே பள்ளிக்குப் படிக்க வருகிறார்கள். அந்த மூன்று மாதம் அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைச் செய்கிறது, கார்த்திக் தன் காதலியுடன் சேர்ந்தாரா, அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றனரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காதல் குதூகலம், காதல் தோல்வி தரும் வேதனை, பல ஆண்டுகளுக்குப் பின் வரும் குற்றவுணர்வு என நகரும் அழுத்தமான ‘கார்த்திக்’ கதாபாத்திரத்தைத் ரக்சன். நன்றாகவே நடித்திருக்கிறார்.
கதாநாயகனுக்கு இணையாக தீனாவும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகி மலினா கொடுத்த கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளார். முனீஸ்காந்த் சில உணர்வுபூர்வமான காட்சிகளில் வந்து, பலம் சேர்த்திருக்கிறார். மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு கன்னியாகுமரியின் பசுமையை படத்திற்கு கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறது. சச்சின் வாரியரின் இசையில், பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.

இயக்குநர் ரா.கோ.யோகேந்திரன் எல்லோரும் ரசிக்கும்படி மாணவர்களின் பள்ளிபருவத்தை அழகாக சொல்லியிருக்கிறார் பாராட்டுக்கள்.