Take a fresh look at your lifestyle.

Devil Movie Review

39

ராதாகிருஷ்ணன்ஹரி தயாரிப்பில் ஆதித்யா இயக்கத்தில் விதார்த் பூர்ணா திரிகுன் சுபஸ்ரீ நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் டெவில்.இசை இயக்குநர் மிஷ்கின்.

கதை

பெரியோர்கள் பார்த்து விதார்த்துக்கும், பூர்ணாவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் கணவன், மனைவி இடையே பாசம் இல்லை. பூர்ணா நெருங்க முயன்றாலும்
விதார்த்துக்கு சுபஸ்ரீமீதுள்ள கள்ள காதலால்
தள்ளித் தள்ளிப் போகிறார் விதார்த்.

கணவரின் அன்பு கிடைக்காத சோகத்தில் பூர்ணா காரில் பயணிக்கும்போது டிராவலரான ரோஷன் (திரிகுன்) பைக் ஓட்டி வரும்போது எதிர்ப்பாராத விதமாக ஹேமா (பூர்ணா) தன் காரால் இடித்து விடுகிறார். அதில் ரோஷனுக்கு கையில் பலத்த காயம் ஏற்படுகிறது. தன்னால் பாதிக்கப்பட்ட ரோஷனை மருத்துவமனையில் சேர்க்கிறார் ஹேமா. ரோஷனுக்காக சமையல் செய்து தருவது, காரில் ஊர் சுற்றிக்காட்டுவது, ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் செல்வது என ரோஷனுடன் நட்பை வளர்க்கிறார்.
சில நாட்களிலேயே அந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்வதை உணர்ந்த ஹேமா, ரோஷனிடமிருந்து விலகி, தன்னுடைய வீட்டிற்குத் திரும்புகிறார். அங்கே அவரது கணவனான அலெக்ஸ் (விதார்த்) உறைந்து போய் உட்கார்ந்திருக்கிறார். இப்படி செல்லும் கதையில் ஒரு கட்டத்தில் ஒரு நாள் விதார்த் கள்ளக் காதலியுடன் இருக்கும் பொழுது பூர்ணாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இன்னொரு புறம் பூர்ணா தன் காதலனுடன் இருக்கும் பொழுது விதார்த்திடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே டெவில் படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் விதார்த் ஒரு யதார்த்த வக்கீலாக நடித்திருக்கிறார். சுபஸ்ரீ இடம் இவர் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் பூர்ணாவிடம் மண்டியிட்டு அழும் காட்சிகள் நடிப்பில் சிகரம் தொட்டிருக்கிறார். இவருக்கும் சுபஸ்ரீக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இன்னொரு நாயகன் திரிகுன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் பூர்ணாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி பூர்ணாவுக்கு நல்ல நடிப்பதற்கான ஸ்கோப் இருக்கும் திரைப்படம். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிரேமில் அழகாக தெரிகிறார், அழகாக நடிக்கிறார், அளவாக பேசி மனதை கொள்ளை அடிக்கிறார். இன்னொரு நாயகி சுபஸ்ரீ கவர்ச்சியில் கலங்கடித்து இருக்கிறார். மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்
கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் கவித்துவமான ஷாட்களிலும் ரசிக்க வைக்கிறது. இளையாராஜாவின் படத்தொகுப்பு அருமை. இயக்குநர் மிஷ்கின் இசையமைத்துள்ளார். பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைத்துள்ளார். ஆங்காங்கே நுணுக்கமான ‘ஒலி வடிவமைப்பில்’ அழகிய கூத்தன் தனித்துக் கவனிக்க வைக்கிறார்.

ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு முழு படத்தையும் விறுவிறுப்புடன் கூடிய காதல் கதையாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா. முதல் பாதி முழுவதும் பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திய இயக்குநர், இரண்டாம் பாதியில் விதார்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் படம் விரிந்து போக போக பூர்ணா விதார்த் இடையிலான பிரச்சனைகளை விரிவாக பேசி இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸில் படம் முடிகிறது. படத்தில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள் இவர்களை சுற்றி படம் முழுவதும் நகர்கிறது. இதனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். இருந்தும் கதை சொன்ன விதத்திலும் திரைக்கதை அமைத்த விதத்திலும் ஆங்காங்கே திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மூலம் சுவாரசியத்தை கூட்டி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா பாராட்டுக்கள்