SSB ஃபிலிம்ஸ்
வழங்கும்
தயாரிப்பாளர்
ஶ்ரீநிவாசன் குரு
தயாரிப்பில்…
தமிழ் சினி கார்பரேஷன்
வெளியீட்டில்…
இயக்குனர்
M.முத்து
இயக்கத்தில்
இசையமைப்பாளர்
பால முரளி பாலு
இசையில்…
ஒளிப்பதிவாளர்
கொளஞ்சி குமார்
ஒளிப்பதிவில்…
பட தொகுப்பாளர்
விஜய் வேலு குட்டி
எடிட்டிங்கில்….
சத்விக் வர்மா,
சுரேகா வாணி,
ஜாக் ராபின்சன்,
நயன் கரிஷ்மா,
ஶ்ரீமன்
மறைந்த நடிகர் – மனோ பாலா
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
சிக்லெட்ஸ்
கதை
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் பள்ளித் தோழிகள்.. எப்போதும் இணை பிரியாத இவர்கள் வளர வளர இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக மாறி விடுகின்றனர்..
எனவே பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து சுதந்திரப் பறவைகளாக செயல்பட விடுகின்றனர்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது நமக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று எண்ணி இந்த மூன்று இளம் பெண்களும் தனது நண்பரின் சகோதரி திருமணத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, மூன்று ஆண் நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். ஆனால் இந்த விஷயம் அந்த பெண்களின் வீட்டிற்கு எப்படியோ தெரிந்து விடுகிறது, அதன் பின்பு என்ன ஆனது என்பதே சிக்லெட்ஸ் படத்தின் கதை.
பொதுவாக அடல்ட் காமெடி படம் என்றால் அது ஆண்களை சுற்றி மட்டுமே இருக்கும், ஆனால் சிக்லெட்ஸ் படம் முதல் முறையாக வித்தியாசமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது
மூன்று பெண் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எழுதப்பட்டிருந்தது. நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் இளம் தோழிகள்.. அழகாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் கவர்கின்றனர்.. திரைப்படத்தில் நடித்தார்கள் என்பதைவிட தோழிகளாக என்ஜாய் செய்திருக்கின்றனர்..
வருண் கேரக்டரில் சாத்விக் வர்மா, சிக்கு கேரக்டரில் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன் கேரக்டரில் வருபவர் ஆகியோர் தோழிகளுக்கும் கை கொடுத்து கதைக்கும் உதவியிருக்கின்றனர்..
மூன்று பெண்களின் பெற்றோர்களாக சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி ஆகியோர் மிக இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கின்றனர்
ஒரு அடல்ட் காமெடி படத்திற்கு தேவையான வசனங்களும் காட்சிகளும் படம் முழுக்க நிறைந்துள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் படம், டீன் ஏஜ் பெண்களை வளர்க்கும் பெற்றோர்களின் படமாக மாறுகிறது.
கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலு.. பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.
இளம் வயதில் காதல் காமம் என்பதெல்லாம் சகஜமான ஒன்றுதான். ஆனால் அதை எல்லாம் தவிர்த்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் நல்ல வழியில் செல்ல வேண்டும் என நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர் முத்து பாராட்டுக்கள்..