ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோரது தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் “தூக்குதுரை”
இப்படத்தில் இனியா, பால சரவணன், மகேஷ், சென்ராயன், அஸ்வின்,மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை
கதாநாயகி இனியா ஒரு அரச குடும்பத்தின் வம்சாவளியை சார்ந்தவர், யோகி பாபு ஊர் திருவிழாக்களில் ப்ரொஜெக்டர் மூலம் திரைப்படங்களை திரையிடும் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். ஜமீன்தார் பெண்ணான இனியா, யோகிபாபுவை காதலிக்கிறார். இவர்கள் காதலை
இனியா வீட்டில் சம்மதிக்கமாட்டார்கள் என இனியா இரவில் கோவில் கிரிடத்தையும் எடுத்துக்கோண்டு யோகிபாபுவுடன் ஊரைவிட்டு செல்லும்போது விஷயம் தெரிந்து இதனால் கோபம் கொள்ளும் ஜமீன்தார் யோகி பாபுவை கிணற்றில் வைத்து எரித்து விடுகிறார். அப்போது
இந்த கிணற்றில் அரச குடும்பத்தின் விலை உயர்ந்த கிரீடம் கிணற்றில் விழுந்து விடுகிறது. கிரீடம் கிணற்றில் உள்ள விஷயம் தெரியாமல் ஒவ்வொருவரும்கிரீடம் எங்கு இருக்கிறது என தேடுகின்றனர். கிரீடம் இருந்தால்தான்ஊரில் திருவிழா நடத்த முடியும். செத்துப்போன யோகிபாபு பேயாக வந்து அவர்களுக்கு கிரீடம் கிடைக்காமல் எல்லோரையும் கஷ்டப்படுத்துகிறார். முடிவில் கிரீடம் கிடைத்து ஊர் திருவிழா நடந்ததா? இல்லையா?யோகிபாபு காதலி நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
யோகி பாபு, இனியா தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.
பால சரவணன் வசனங்கள் சென்ராயன், மகேஷ், மொட்டை ராஜேந்திரன் காமெடி பரவாயில்லை. மாரிமுத்து, நமோ நாராயணன், அஸ்வின் மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளார்கள்.ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். K S மனோஜின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
திகில்-நகைச்சுவை போன்ற காமெடிகளை உள்ளடக்கி பார்வையாளர்களை ரசிக்க வைக்க முயற்ச்சித்துள்ளார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். பாராட்டுக்கள்.