Take a fresh look at your lifestyle.

Singapore Saloon Movie Review

51

 

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன் (Singapore Saloon). வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை

முடி திருத்தும் கடை வைத்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தூக்க மாத்திரையை டிரிங்ஸில் கலந்து தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியிலிருந்து படம் தொடங்குகிறது. ஆர் ஜே பாலாஜியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஃபிளாஷ்பேக் மூலம் சொல்லி ஆர்.ஜே பாலாஜி இறந்தாரா? இல்லையா? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை.

தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் ஆர்.ஜே.பாலாஜி சிறுவயதில் தனக்கு மொட்டையும் தன் நண்பனுக்கு சுன்னத்தும் செய்த ஊரில் முடி திருத்தும் லாலை பிடிக்காததால் அவருக்கு தொல்லை கொடுக்கின்றனர். பின்னர் அவர் தனக்கு ஹேர்ஸ்டைல் செய்த அழகை ரசித்து லாலிடம் நட்பாகிறார். பள்ளிக்கு செல்லும் நேரம் போக முடிதிருத்தும்தொழிலை கற்று தனது ரோல் மாடலாக லாலை ஏற்றுக் கொள்கிறார் ஆர் ஜே பாலாஜி. தான் எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணராக வருவேன் என கனவு கண்டு கொண்டிருக்கிறார். இதை தெரிந்த பெற்றோர் எதிர்க்கிறார்கள்பின்னர் ஆர் ஜே பாலாஜியின் தந்தை தற்போது என்ஜினியரிங் படி படித்து முடித்த பிறகு முடிவு செய் என்று சொல்கிறார். அப்பாவின்கட்டளைபடி படிக்கிறார். படித்து முடித்த பின் நல்லவேலை கிடைத்தும் அதை ஏற்காமல்தன் ஆசைபட்டபடி
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சிகை அலங்கார பணியில் அடியெடுத்து வைக்கிறார். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான ஜான் விஜய்யிடம் வேலைக்கு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து வெளியேறி தனியாக சிங்கப்பூர் சலூன் என்ற பிரமாண்டமான கடையை தொடங்குகிறார். இந்த கடை தொடங்கிய பிறகு கடன் பிரச்சினைகள் ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது. இதனால் விரக்தியடையும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை முடிவுக்கு செல்கிறார். ஆர்.ஜே பாலாஜியின் தற்கொலை செய்துகொண்டாரா? இல்லையா? அதன்பிறகு என்ன நடந்தது என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் மீதிக்கதை

ஆர் ஜே பாலாஜியின் நடிப்பு சிறப்பு. சத்யராஜின் நடிப்பு படத்திற்கு ஆறுதல். லால் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை அவர் அழகாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் படத்தின் இறுதி வரை ஆர்.ஜே. பாலாஜிக்கு துணை நின்று நண்பனாக வரும் கிஷன் தாஸ், நம்முடைய வாழ்க்கையில் நமக்காக இருக்கும் நண்பனை நினைவூட்டுகிறார். ரோபோ சங்கரின் நடிப்பும் அருமை. ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கிஷன் தாஸின் சிறு வயது பருவத்தில் நடித்த சிறுவர்களின் நடிப்பும் அருமை.
சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். விவேக் மெர்வின் பாடல்கள் இசையும் ராவேத் ரியாஸின் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

தன் கனவை அடையத் துடிக்கும் கிராமத்து இளைஞன் என்ற கதையை சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம் இயக்குநர் கோகுல். பாராட்டுக்கள்