அற்புத அனுபவத்திற்குத் தயாராகுங்கள் : 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும் ZEE5 !! ~ ரோனி ஸ்க்ரூவாலா
அற்புத அனுபவத்திற்குத் தயாராகுங்கள் :
75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும் ZEE5 !!
~ ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் மற்றும் சாம் பகதூர் கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். ~
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று ஜனவரி 26 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, விக்கி கௌஷல் நடித்த, சாம் பகதூர் படத்தின் பிரத்தியேக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்திருக்கிறது. இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ள இப்படத்தை, ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP production நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் சாம் மானெக்ஷாவின் அசாதாரண வாழ்க்கையை, அவரின் நம்ப முடியாத போர் சாகசங்களை விவரிக்கிறது, அவரது ஆரம்ப நாட்களில் இராணுவத் தளபதியாக இருந்து, அவரது ஓய்வு வரை, அவரது புகழ்பெற்ற பயணத்தின் மைல்கற்கள் மற்றும் வெற்றிகளை இப்படம் விரிவாக சொல்கிறது. விக்கி கௌஷலுடன் பாத்திமா சனா ஷேக், ஷான்யா மல்ஹோத்ரா, முகமது போன்ற நட்சத்திர நடிகர்களுடன் ஜீஷன் அய்யூப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சாம் பகதூர் திரைப்படம் சாம் மானெக்ஷாவின் புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்திய இராணுவ அதிகாரியாக அவர் ஆவதற்கான, அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை, உண்மையாக ஆராய்கிறது. இப்படம். 75வது குடியரசு தின நன்நாளில், ஒரு அஞ்சலியாக இந்த சினிமா உருவாகி வந்துள்ளது. ஒரு தலைசிறந்த படைப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் ஒரு உண்மையான ஹீரோவின் ஆத்மாவிற்கு மரியாதை செலுத்தும் அஞ்சலியாக இப்படம் இருக்கும். நான்கு தசாப்தங்களில் ஐந்து போர்களில் கலந்துகொண்டு சேவை செய்த, இந்திய இராணுவத்தின் ஒரு அடையாளமான சாம் மானெக்ஷாவின் பிரமிப்பான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.
இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மானெக்ஷாவின் இணையற்ற இராணுவ பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, அவரது வீரம், புத்திசாலித்தனம் மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்தத் திரைப்படம் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளின் சிக்கலான இயக்கங்களையும் கூடவே ஆராய்கிறது. தேசத்திற்காக சாம் மானெக்ஷா தந்த பங்களிப்புகளைப் பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது. விக்கி கௌஷலின் மிகச்சிறப்பான நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.
ஒரு திரைப்படத்தின் வெற்றி பல்வேறு முனைகளில் அதன் ஒட்டுமொத்த ஈர்க்கும் தரம், ஆகிய அனைத்தையும் கொண்டுள்ள இப்படம், வரலாற்றினை மீண்டும் உயிர்ப்பிக்கும் திறனில் அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. இப்படம் பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக அமையும். சாம் பகதூர் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியராக ZEE5 இல் ஜனவரி 26 ஆம் தேதி பிரத்தியேகமாக வெளியாகிறது.
ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் குடியரசு தினம் என்பது ஒரு ஆழமான உணர்வைத் தரக்கூடியது. இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, குடியரசு நன்நாளில் சாம் பகதூர் படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நம் தேசத்தின் உணர்வோடு எதிரொலிக்கும் இதுபோன்ற சொல்லப்படாத கதைகளை, எங்கள் பார்வையாளர்கள் விரும்புகிறார்கள், மேலும் அவர்களுக்குப் பொருத்தமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுதுபோக்குகளை வழங்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தப் படம் ஒரு உண்மையான நிஜவாழ்வு ஹீரோவுக்கு அஞ்சலி செலுத்தும் படம். ரோனி ஸ்க்ரூவாலா புரொடக்ஷன்ஸ் உடனான எங்கள் கூட்டணி மிகவும் மகிழ்ச்சிகரமானது. அவர்களுடனான கூட்டணி, தேஜஸ் மற்றும் சாம் பகதூர் போன்ற தேசபக்தி திரைப்படங்களை மீண்டும் வழங்க எங்களுக்கு உதவியது. சாம் பகதூர் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, பார்வையாளர்கள் எங்கள் தளத்திலும் இந்தப் படத்தைப் பார்த்து மகிழ்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா கூறுகையில், “சாம் பகதூர் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் இண்டஸ்ட்ரியில் இருந்து ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் ஐடியா எனக்குள் வந்தது, இப்போது இந்த திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது, எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. ஐகான்கள் அதிகம் உள்ள நம் நாட்டில், அவர்களின் கதைகளைக் கொண்டாட நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். துணிச்சலான ஹீரோவான சாம் மானெக்ஷாவின் உத்வேகம் தரும் கதையை வெளிக்கொணரவும், அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் எனது தாழ்மையான முயற்சி தான் இந்த படம். ZEE5 உடன் இணைந்து இந்த அழகான கதையை, உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு வழங்குவது மகிழ்ச்சி. இந்த படத்தின் மூலம் நாங்கள் மேற்கொண்ட பயணத்தை, பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
இயக்குநர் மேக்னா குல்சார் கூறுகையில், “இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்குவது எனக்கு ஒரு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது, அதை நான் ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். சாம் பகதூர் கதை பார்க்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே, விக்கி கௌஷல் அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நான் அறிந்தேன். ஈடு இணையற்ற நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் தந்துள்ளார். இலட்சியங்களும் அதை வாழ்ந்து காட்டும் முன்மாதிரிகளும் காலத்தைக் கடந்தவர்கள், யாராவது ஒருவர் உண்மை மற்றும் நேர்மையுடன் வாழ்ந்தால், அது காலத்தைக் கடந்து நிற்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ZEE5 மூலம் இந்த சொல்லப்படாத கதையை இன்னும் அதிகமான பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படம் என்னையும் சாம் பகதூரின் ஒட்டுமொத்த குழுவையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியதைப் போல், பார்வையாளர்களின் மனதிலும் ஆழமாக எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.
நடிகர் விக்கி கௌஷல் கூறியதாவது.., “சாம் மானெக்ஷாவின் கதாபாத்திரத்தில் நடித்தது, மிகவும் பெருமையும் மரியாதையும் நிறைந்த ஒரு நம்பமுடியாத பயணமாகும். அத்தகைய துணிச்சலான மற்றும் புகழ்பெற்ற ஆளுமையைத் திரையில் பிரதிபலிப்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்காகக் கிடைத்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்படத்தின் திரையரங்க வெளியீட்டின் போது ரசிகர்கள் கதாபாத்திரத்தின் மீது பாச மழை பொழிந்தனர். ZEE5 இல் நிகழும் இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர், இக்கதையைப் பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல உதவும். எனவே 75வது குடியரசு தினத்தில் சாம் பகதூர் படம் மூலம் நம் தேசத்திற்கு அழியாத அஞ்சலி செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். இது ஒரு படம் மட்டுமல்ல; இது பார்வையாளர்களுடன் பகிரப்படும் ஒரு பெரும் பயணம், இப்படம் மூலம் பார்வையாளர்கள் உத்வேகம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.”
26 ஜனவரி 2024 முதல் ZEE5 இல் சாம் பகதூர் ஸ்ட்ரீமிங்கைப் கண்டுகளிக்கலாம்.