சித்த மருத்துவர் Dr K வீரபாபு கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி பிண்ணனி இசையமைத்து கதாநாயகனாகவும் நடித்து ஜனவரி 25 ல் வெளியாகும் படம் முடக்கறுத்தான். இதில் மஹானா சஞ்சீவி காதல் சுகுமார், சாமஸ், அம்பாணி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை
கதாநாயகன் வீரபாபு சிறுவயதிலே குழந்தை கடத்தும் கும்பலால் கடத்தப்பட்டு மீண்டு வந்து சிக்னலில் பிச்சை எடுக்க பயன்படுத்தும் குழந்தைகளைகாப்பாற்றி தன் காப்பகத்தில் வளர்த்து வருகிறார். அவர்களை மட்டுமல்லாது அப்பா அம்மா இல்லாத குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இந்த நசூழ்நிலையில் குழந்தைகளை கடத்தும் கும்பல் தலைவனை கண்டுபிடித்து பழிவாங்குவதே படத்தின் மீதிக்கதை.
சிற்பியின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கிறது.
அருள் செல்வனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
கதாநாயகனாக டாக்டர் வீரபாபு சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார். நடிப்பிலும் நடனத்திலும் பரவாயில்லை ரகம். மஹானா க தாநாயகியாக கொஞ்ச நேரமே வந்தாலும் அவரது நடிப்பும் அருமை. சமுத்திரக்கனி கெஸ்ட்ரோலில் வந்து சிறப்பாக நடித்திருக்கிறார் மற்றும் இதில் நடித்திருக்கும் மயில்சாமி மூர்த்தி , காதல் சுகுமார், அம்பானி சங்கர், சாம்ஸ் என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
சூப்பர் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் அருமை.
குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக எடுத்து எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியதோடுஅரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார் பாராட்டுக்கள்.