Hanu man Movie Review:
பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ள படம் ஹனுமன். பிரசாந்த் வர்மாவின் சினிம டிக் யுனிவர்சில் வெளியாகியிருக்கும் முதல் படம் இது. ஹனுமனை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சூப்பர் ஹீரோ படமான ஹனுமன் படத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வெண்ணிலா கிஷோர், வினை, தீபக் ஷெட்டி, சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை
ஒரு மலை கிராமத்தில் கடல் மலைகள் சார்ந்த இடத்தில்
நாயகன் தேஜா சந்தா அவரது அம்மா, அக்கா வரலட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார். அந்த ஊருக்கு கதாநாயகி வருகிறாள். அந்த ஊரில் ஊர் காவலன் என்ற பெயரில் அடாவடித்தனம் செய்கிறார். தன்னை எதிர்த்து பேசுபவர்களை வில்லன் குஸ்தி சண்டையில் வெளுத்து வாங்க அவரை நாயகி எதிர்த்து கேள்வி கேட்கிறாள். பிரச்சனை உண்டாகிறது.
நாயகனுக்கு ஒரு சக்திவாய்ந்த கல் கிடைக்கிறது ஹனுமான் அருளால். பிறகு சில அதிசயங்கள் நடக்கிறது. அந்தக் கல்லை அடைய Vinay அந்த ஊருக்கு வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை கதாநாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பிலும், நடனத்திலும், சண்டை காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.கதாநாயகியாக
அம்ரிதா ஐயர் நடிப்பிலும் ஆழகிலும் நம்மை வசீகரம் செய்கிறார், நாயகன் அக்காவுக்கு வரலட்சுமி சரத்குமார் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார், வில்லனாக வினய் நடிப்பில் மிரட்டியுள்ளார். வெண்ணிலா கிஷோர், வினை, தீபக் ஷெட்டி, சத்யா என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.
பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது. ஷிவெந்த்ராவின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகு சேர்த்துள்ளது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா பேமிலியுடன் பொங்கலுக்கு விருந்தாக அனைவரும் ரசித்து பார்க்கும்படியான நல்ல திரைப்படத்தை கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்