o
கேப்டன் பில்லர் திரைவிமர்சனம்
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் வழங்கும், தயாரிப்பாளர்கள்செந்தில் தியாகராஜன் மற்றும்அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில்…இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்… இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையில்… ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனிஒளிப்பதிவில்… பட தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் எடிட்டிங்கில் தனுஷ்,சிவ ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன், சுந்தீப் கிஷான், மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி, போஸ் வெங்கட், ஜான் கோக்கன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன், காளி வெங்கட் , விஜி சந்திரசேகர், இளங்கோ குமரவேல், பால சரவணன், ஜெய பிரகாஷ், ஸ்வயம் சித்தா, சுமேஷ் மூர் அமீர் அலி ஷேக் மற்றும் பலர் நடித்து பொங்கல் வெளியீடாக வெளியாகியிருக்கும் படம் கேப்டன் மில்லர்.
கதை
சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் சேர்கிறார்.ஒரு கட்டத்தில் கதாநாயகன் சுதந்திரத்திற்காக போராடும் இந்திய மக்களையே சுட்டுக் கொல்லும் சூழ்நிலை உருவாகிறது.
இதனால் மனமுடைந்த கதாநாயகன் அங்கிருக்கும் பிரிட்டிஷ் கேப்டனை கொன்று விட்டு வெளியேறுகிறான். பிறகு கேப்டன் மில்லரை பிரிட்டிஷ் ராணுவம் தேடுகிறது. பிரிட்டிஷ் ராணுவத்திடம் அனலீசன் மாட்டிக் கொண்டானா? இல்லையா?
கிராமத்து கோவிலுக்குள் இவர்கள் சென்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் திரைக்கதை.
தனுஷ் வெவ்வேறு தோற்றத்தில் இளைஞனாக காதலனாக மிலிட்டரியாக மக்களை காக்கும் தலைவனாக மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
தனுஷுடனே வரும் இளங்கோ குமாரவேல், நண்பனாக திரையில் தோன்றும் சந்தீப் கிஷன், ஆங்கிலேய படையில் இடம்பெற்றிருப்பவராக வரும் வினோத் கிஷன் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அரசர் குடும்பத்தில் பிறந்து ஆதிக்கத்தை எதிர்த்து துப்பாக்கி ஏந்தும் பெண்ணாக வரும் பிரியங்கா மோகன், தனுஷ் குழுவில் இடம்பெறும் பெண் போராளியாக வாழ்ந்துள்ள நிவேதிதா சதீஷ் என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். மற்றும் ஜெயபிரகாஷ், அவரின் மகனாக இளவரசன் கதாபாத்திரத்தில் கொடூரம் காட்டியுள்ள ஜான் கொக்கன், குமாஸ்தாவாக வரும் காளி வெங்கட் ஆகிய மூவரும் ரசிகர்களிடம் திட்டும் வாங்கும் அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளனர்.
கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கியமான ஹீரோ என்றே ஜிவி பிரகாஷை சொல்லலாம். அந்தவிற்கு படத்தின் வேகத்துக்கு ஏற்ப பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார். சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். நாகூரான் ராமசந்திரனின் கட்ஸ் இன்னும் குறைத்திருக்கலாம்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது முந்தைய படமான ராக்கி மற்றும் சாணிக்காகிதம் ஆகிய படங்களை போல் இதையும் ஒரு ஆக்ஷன் படைப்பாக, சமகால அரசியல், சமூக நிகழ்வுகள் கலந்து கொடுத்திருக்கிறார். படம் நெடுகிலும் ஒலிக்கும் துப்பாக்கி சப்தங்களும், குண்டு வெடிப்பகளும் பலருக்கு பிடிக்காமல் போகலாம். அதுவே சிலருக்கு இப்படத்தை திரையில் கொண்டாட காரணமாகவும் அமையலாம். மற்றபடி வன்முறைக்கு வன்முறை என்ற அருண் மாதேஸ்வரனின் ஸ்டைலில், தனுஷ் ரசிகர்களுக்கான பொங்கல் ட்ரீட்டாக அமைந்துள்ளது இந்த ‘கேப்டன் மில்லர்’.