அயலான் திரைவிமர்சனம்
K J R ஸ்டுடியோஸ் மற்றும்Phantom FX ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், தயாரிப்பாளர்கள் கொட்டபாடி J.ராஜேஷ் மற்றும் R.T. ராஜா தயாரிப்பில்… K.J.R ஸ்டுடியோஸ் வெளியீட்டில் இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில்… இசையமைப்பாளர் இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இசையில் ஒளிபபதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவில்… பட தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங்கில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோபிகர் யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா, பாலா சரவணன், கோதண்டம், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்து பொங்கல் வெளியீடாக வெளியாகியிருக்கும் படம் அயலான்.
கதை
கொடைக்கானலின் பூம்பாறை கிராமத்தில் புல், பூண்டு, பூச்சிக்கும் கேடு விளைவிக்காமல் இயற்கை ஆர்வலராக, பிழைக்கத் தெரியாத நபராக விவசாயம் செய்தபடி வலம் வரும் சிவகார்த்திகேயன், தன் அம்மாவின் கவலைக்கு மனமிறங்கி சென்னைக்கு சம்பாதிக்க வந்து கருணாகரனிடம் வேலைக்கு சேர்கிறார். இப்படி ஒரு கதை சென்று கொண்டிருக்க இதே சமயத்தில் 2030 – ல் பூமியில் எனர்ஜியின் தேவை பல மடங்கு அதிகமாகும் என்பதை தெரிந்து கொண்டு, பூமியின் மிக மிக ஆழத்தில் இருக்கும் ஒரு வாயுவை எடுக்க முதலீட்டாளர்களிடம் பிசினஸ் பேசுகிறான் ஆர்யன். அதற்கு காரணம் அவன் கையில் அப்படியான ஒரு கருவி இருக்கிறது.
இதனை வேற்று கிரகத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கும் ஏலியன், அதன் ஆபத்தை உணர்ந்து அந்த கருவியை கைப்பற்ற பூமிக்கு வருகிறது. பூமிக்கு வந்த ஏலியன் சிவகார்த்திகேயனிடம் நட்பு கொள்கிறது. பூமிக்கு ஏலியன் வந்த செய்தியறிந்த ஆர்யன் ஏலியன் கடத்தி தன் கஸ்டடியில் வைத்து துன்புறுத்துகிறான். ஆர்யனிடம் மாட்டிக்கொண்ட ஏலியனை சிவகார்த்திகேயன் காப்பாற்றினாரா? இல்லையா? ஆர்யனிடம் இருந்த கருவியை ஏலியன் கைப்பற்றியதா? இல்லையா? ஏலியன் முடிவில் அவரது கிரகத்திற்கு சென்றதால்? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை
சிவகார்த்திகேயன் நடனம் சண்டை நடிப்பில் அசத்தியிருக்கிறார். கதாநாயகியாக ராகுல் பிரீத்தி சிங் சிறப்பாக நடித்துள்ளார். பாலசரவணன்,யோகிபாபு, கருணாகரன், கோதண்டம் காமெடி ரசிக்கவைக்கிறது.
மற்றும் இதில் நடித்த ஷரத் கேல்கர், இஷா கோபிகர்,
பானுப்பிரியா, செம்மலர் அன்னம் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஏலியன் பாத்திரம் சிறப்பு.
அயலான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. நிரவ் ஷா வின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக உள்ளது..
ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் பரவாயில்லை ரகம். பிண்ணனி இசை அருமை.
ஏலியன் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஏலியனுக்கு டப்பிங் பேசி இருப்பது கூடுதல் சிறப்பு. எடிட்டிங் ரூபன் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ரவிக்குமார் இந்தப்படத்தில் திரைக்கதையின் சுவாராஸ்யத்தில்
சறுக்கியிருக்கிறார். அயலான் கொஞ்சம் சுமாராக இருப்பதாலும் படத்தில் ஏலியன் இருப்பதால் குழந்தைகள் குடும்பங்கள் பார்க்கும் படமாக இருக்கும். பாராட்டுக்கள்.