Take a fresh look at your lifestyle.

ரூட் நம்பர். 17 திரைப்பட விமர்சனம்

67

ரூட் நம்பர். 17 திரைப்பட விமர்சனம்

அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில்
இயக்குனர் அபிலாஷ் தேவன் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ், அஞ்சனா,? ஆகில் பிரபாகர், அமர் ரிமச்சந்திரன், அருவி மதன், ஹரிஷ் பேரிடி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் Route No 17.

கதை

காதல் ஜோடிகளான அஞ்சனா மற்றும் அகில் பிரபாகர் இருவரும் தனிமையில் சந்தோசமாக இருப்பதற்காக சத்யமங்களம் காட்டுப்பகுதிக்குள் செல்கின்றனர். இவர்கள் செல்லும் போது யாரும் இவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தங்களது போனை வீட்டிலேயே வைத்துவிட்டு செல்கின்றனர். ஆனால் அஞ்சனா கிளம்பும்முன் தனது தோழிக்கு மட்டும் சொல்லிவிட்டு செல்கிறார். இவர்கள் காட்டுக்குள் சென்றதும் சந்தோசமாக இருக்கின்றனர். அப்போது ஆகில் பிரபாகர் அஞ்சனாவிடம் காரைவிட்டு இறங்காதே யாரோ இருப்பதுபோல் தெரிகிறது என்று சொல்ல சொல்ல காதலன் பேச்சை கேட்காமல் அஞ்சனா இறங்க
சைக்கோ போல் இருக்கும் ஜித்தன் ரமேஷ் இவர்கள் இருவரையும் கடத்தி கொண்டுபோய் அவரது இடத்தில் வைக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க இருவரும் முயற்சிக்கும்போது, சைக்கோ ஜித்தன் பிடித்து கஸ்டடியில் வைத்துக்கொள்கிறார். தோழி இரண்டு நாட்கள் ஆகியும் வராததால் அஞ்சனாவின் தோழி போலீசில் புகார் கொடுக்கிறார், பிறகு போலீஸ் அவர்களை தேடி செல்கிறது. கடைசியில் அஞ்சனா, அகில் பிரபாகர் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? என்பதும் ஜித்தன் ரமேஷ் சைக்கோவானதுக்கு யார் காரணம்? என்பதும் இவர்களை கடத்தி கஸ்டடியில் வைத்து என்ன செய்தார் என்பதும்தான் படத்தின் மீதி கதை…

காதலர்களாக அகில் பிரபாகர் அஞ்சனா இருவரும் நடிப்பிலும் பாடல் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளனர். வில்லனாக ஜித்தன் ரமேஷ் சிறப்பாக நடித்துள்ளார். நல்ல போலிஸாக அருவி மதன் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக ஹரிஷ் பேரிடி நன்றாக நடித்துள்ளார். இதில் போலிஸ் அதிகாரியாக தயாரிப்பாளர்
அமர் ராமச்சந்திரன் சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் இதில் நடித்த நிஹாஸ், ஜெனிபர், பிந்து, காசி விஸ்வநாதன், டைட்டஸ் என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் ஓசேப்பச்சன் இசையமைத்துள்ளார். பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம். இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி, கு கார்த்திக் கவிஞர் செந்தமிழ்தாசன்
எழுதியுள்ளனர், அருமையான வரிகளை கொடுத்துள்ளார்கள். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு காட்டுபகுதியின் ஆழகை அழகாக படம் பிடித்துள்ளார். அகிலேஷ் மோகன் படத்தொகுப்பு ஷார்ப்.

சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன். பாராட்டுக்கள்q