Take a fresh look at your lifestyle.

மூன்றாம் மனிதன் திரைவிமர்சனம்

46

ராம்தேவ் இயக்கத்தில் பாக்யராஜ்,
சோனியா அகர்வால்,
ஸ்ரீநாத், ராம்தேவ், ரிஷிகாந்த் பிரணா, சூது கவ்வும் சிவகுமார்,  ராஜகோபால், மதுரை ஞானம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி டிசம்பர் 29 ல் வெளியாகும் படம் மூன்றாம் மனிதன்.
இயக்குனர் ராம்தேவ் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.

கதை

போலீஸ் ஆய்வாளராக இருக்கும் பாக்யராஜ். சரகத்திற்கு உட்பட்ட பல இடங்களில் கை, கால்கள் துண்டாக்கப்பட்ட மனித உடல் ஒன்று எடுக்கப்படுகிறது.இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறார் பாக்யராஜ். எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கும் ராம்தேவை அழைத்து விசாரிக்கிறார் பாக்யராஜ்.
ராம்தேவ் அவரது வாழ்க்கையை விவரிக்கிறார்.. தான் நன்றாக வாழ்ந்து வந்ததாகவும் மதுப்பழக்கம் ஏற்பட்டதால் அதனாலே தனது குடும்பம் சீரழிந்துவிட்டதாகவும் பாக்யராஜிடம் கூறுகிறார்.
இறந்தது சோனியா அகர்வாலின் கணவரான போலீஸ் அதிகாரி என்று கண்டறிகிறார் பாக்யராஜ்.
தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்துகிறார். இறுதியில் அந்த கொலை யாரால் நடந்தது.? எதனால் நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குநர் கே பாக்யராஜ் அவர்கள் விசாரனை செய்யும் போலிஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். சோனியா அகர்வால் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் ராம்தேவ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் என்பதைவிட கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகியாக பிரணா சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் இதில் நடித்திருக்கும்
ஸ்ரீநாத், ரிஷிகாந்த் சூது கவ்வும் சிவகுமார்,  ராஜகோபால், மதுரை ஞானம் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.

வேணு சங்கர், தேவ் ஜி பாடலுக்கான இசையையும் பின்னணி இசையை பி.அம்ரிஷ்ஷும் நன்றாக கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராம்தேவ்
ஒரு வீட்டில் அப்பா அம்மா ஒழுங்கா இல்லனா பசங்களோட வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்ற
கதையை தேர்வு செய்து அதை சுவாராஸ்யமாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பார்க்கலாம்.