மந்திரா வீரபாண்டியன்
இயக்கத்தில் செங்குட்டுவன் இவானா ஆராத்யா எம் எஸ் பாஸ்கர் ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்து டிசம்பர் 39ல் வெளியாகும் படம் மதிமாறன்.
கதை
போஸ்ட்மேன் எம்.எஸ் பாஸ்கருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. வளர்ச்சியில்
நாயகனான நெடுமாறன் குள்ளமாகவுமா அக்கா மதி உயரமாகவும் வளர்கிறாராராகள்.
குள்ளமாக இருக்கும் கதாநாயனை பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்கிறார்கள். அந்த கேளிகளை கடந்து செல்கிறான். திடிரென ஒருநாள் தனது அக்கா வாத்தியாருடன் ஓடிப்போகிறாள். இதனால் தந்தை எம் எஸ் பாஸ்கரும் தாயும் தூக்குமாட்டி கதாநாயகன் கண்முன்னே இறந்துவிடுகிறாராகள். குள்ளமாக இருந்த நாயகனால் அவர்களை காப்பாற்ற முடிபவில்லை.
நாயகன் ஒடிப்போன அக்காவை தேடி சென்னை வருகிறான். அதன்பிறகு என்ன நடந்தது என்பதும்
படத்தின் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து
கல்யாணமான பெண்களை கற்பழித்து கொலை செய்கிறான் ஒருவன்
அவன் யார்? அவனை கதாநாயகனானசெங்குட்டுவன் எப்படி கண்டுபிடித்து போலிஸில் ஒப்படைத்தான் என்பதும் இன்னொரு திரைக்கதை.
கதாநாயகனான செங்குட்டுவன் கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இவானா அக்கா கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். ஆராத்யா கதாநாயகியாக சிறப்பாக நடித்துள்ளார். எம் எஸ் பாஸ்கர் போஸ்ட்மேன் கேரக்டரில் தந்தையாக வாழ்ந்திருக்கிறார். இவருக்கு மனைவியாக நடித்தவரும் நன்றாக நடித்துள்ளார். ஆடுகளம் நரேன் போலிஸ் அதிகாரியாக நன்றாக நடித்துள்ளார். மற்றும் இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
கார்த்திக்ராஜாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் மந்திரா வீரபாண்டியன் குடும்பக்கதை பிளஸ் கிரைம் மர்டர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.