சபா நாயகன் திரைவிமர்சனம்
CS கார்த்திகேயன் இயக்கத்தில்
அசோக் செல்வன்,
மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி
மயில்சாமி மைக்கேல் மற்றும் பலர் நடித்து வெளியாகும் படம்.
கதை
கதாநாயகன் நண்பர்களோடு குடித்துவிட்டு ரோட்டில் ஆட்டம் போட போலீஸிடமிருந்து நண்பர்கள் தப்பித்து செல்ல அசோக் செல்வன் மட்டும் போலிஸிடம் மாட்டிக்கொள்கிறார்.
அசோக் செல்வன் தன் காதல் கதைகளை போலீஸிடம் ஒவ்வொன்றாக சொல்கிறான். அவர்கள் சுவாராஸ்யமாக கேட்க அதன்
பிறகு என்ன நடந்தது? கதாநாயகன் எந்த கதாநாயகியோடு சேர்ந்தார்?
போலிஸிடம் மாட்டியவர் எப்படி விடுவிக்கப்பட்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை
சபா (அசோக் செல்வன் ) என்ற புனைப்பெயர் கொண்ட அரவிந்த், மூன்று பெண்களுடன் சந்திப்பதன் மூலம் காதலின் சந்தோஷங்களையும் சவால்களையும்
கஷ்டங்களையும் என காதலின் யதார்த்தத்தை தன் நடிப்பால் கொடுத்து அசத்தியிருக்கிறார் அசோக் செல்வன் திறமையான நடிகைகளான மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மயில்சாமி, மைக்கேல் என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பாலசுபரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் மூவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் சி எஸ் கார்த்திகேயன் எல்லோரும் ரசிக்கும்படியான காதல் கதையை சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார். பார்க்கலாம்.