கேயார் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் ராமலிங்கம் தயாரித்த ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்தை
டிசம்பர் 22 ல் வெளியிடுகிறார்.
இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், அருந்ததி நாயர், சரவணன், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆயிரம் பொற்காசுகள்
ஜோஹன் இசையமைக்க, பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதை
கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. அந்த ரகசியம் ஒவ்வொருவருக்காக தெரிந்து பங்கு போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதிக் கதை.
விதார்த் சிறப்பாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து சரவணனும் காமெடி கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றும் இதில் நடித்த அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் என இதில் நடித்த அனைவருமே கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் சிறப்பாக நடித்து நம்மை சிரிக்கவைக்கிறார்கள். ஜோஹன் ஷிவனேஷ் இசை படத்தை ரசிக்கவைக்கிறது. பானுமுருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படி கோடுத்துள்ளார் இயக்குநர் ரவி முருகையா.
பார்க்கவேண்டிய படம்