சென்னை:
AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்து வழங்கும் ‘தி ரோட்’ என்ற திரைப்படத்தில் திரிஷா, “டான்சிங் ரோஸ்” ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, M.S. பாஸ்கர், வேலராமமூர்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை அருண் வசீகரனின் இயக்கி இருக்கிறார். .இப்படத்திற்கு கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் ‘தி ரோட்’ படம் வெளிவந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம். .
திரிஷா, தனது கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் 6 வயதில் ஒரு மகனுடனும், சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திக் இருக்கிறார். இந்த சூழலில் இரண்டாவர்ஹாக கர்ப்பமடையும் திரிஷா. தனது மகன் பிறந்தநாளுக்காக சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு காரில் செல்ல பயணப்படுகின்றனர். ஆனால் திரிஷா கர்ப்பம் அடைந்து இருப்பதால் காரில் பயணம் செய்ய முடியாமல் தன் கணவர் சந்தோஷ் பிரதாப்பையும், அவரது மகனையும் அனுப்பி வைக்கிறார்..மதுரை அருகே செல்லும் வழியில் எதிரில் வந்த கார் நிலை தடுமாறி, சந்தோஷ் பிரதாப் வரும் வழியில் வந்து மிகப்பெரும் விபத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த விபத்தில் சந்தோஷ் பிரதாப்பும் அவரது மகனும் இறந்துவிடுகின்றனர்.
இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் திரிஷாவிற்கு கர்ப்பமும் கலைந்துவிடுகிறது. தனது கணவர் இறந்த இடத்திற்குச் செல்லும் போது சிறிதாக ஒரு சந்தேகம் எழுகிறது. கணவன் மற்றும் தனது செல்ல மகன் இருவரும் விபத்தில் மரணம் அடைந்த துக்கம் தாங்க முடியாமல் தவிக்கும் கதாநாயகி திரிஷா, விபத்து நடந்த பகுதியை பார்வையிடும் போது அங்கே அவருடைய கண் முன் ஒரு விபத்து நடக்கிறது.
கண் முன் நடந்த விபத்தில் சிக்கியவரை கதாநாயகி திரிஷா காப்பாற்ற முயற்சி செய்து வெளியில் சென்று உதவி செய்ய நினைக்கும்போது, விபத்துக்குள்ளான காரும் மற்றும் அதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களும் திடீரென்று மாயமாகி விடுகிறார்கள். இந்த விபத்து பற்றி திரிஷா அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அந்த இடத்தை காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடும் போது விபத்து நடந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் அங்கு தென்படவில்லை.
இதனால் அதிர்ச்சியாகும் திரிஷா, விபத்து நடந்த இடத்தில் எதுவும் இல்லாததால் அந்த இடத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை உணர்வதோடு, அடிக்கடி விபத்து நடக்கும் இடமாக இருப்பதால், அதன் பின்னணியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அந்த விபத்துக்கள் அங்கு ஏன் நடக்கிறது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை திரிஷா கண்டுபிடித்து சொல்வதுதான் ‘தி ரோட்’ படத்தின் மீதிக்கதை.
இந்த ‘தி ரோடு’ திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். கதாநாயகி திரிஷாவை 6 வயது சிறுவனுக்கு தாய் என்றால் ரசிகர்களால் நம்ப முடியவில்லை. கதாநாயகி திரிஷாவின் கணவராக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், ஒரு சில காட்சிகள் வந்தாலும் தனது வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர், நடிப்பில் மிரட்டுகிறார். கதாநாயகி திரிஷாவின் தோழியாக வரும் மியா ஜார்ஜ், மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
மியா ஜார்ஜ் கணவராக வரும் விவேக் பிரசன்னா, கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். கான்ஸ்டேபிளாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார். டான்சிங் ரோஸ் ஷபீர் தந்தையாக வரும் வேல ராமமூர்த்தி மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் மட்டும் அனைத்து கதாபாத்திரங்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.ஜி. வெங்கடேஷ் இரவு நேரக் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, விபத்து காட்சிகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தி அருமையாக அசத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
பின்னணி இசை சாம்.சி.எஸ் பல இடங்களில் இசை மூலம் கதைச் சொல்ல முடியும் என்பதை உணர வைத்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணத்தில் இருக்கும் சில பயங்கரங்களை விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் படமாக்கி கவனம் பெறுகிறார் இயக்குனர் அருண் வசீகரன். ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் கூட்டி பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘தி ரோட்’ திரைப்படம் மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு படம்.