Take a fresh look at your lifestyle.

ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்!!

100

சென்னை:

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது.

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கூட்டணியின் முதல் படமான ‘செகண்ட் ஷோ’வில் அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட துல்கரின் கெட்அப்பைப் போலவே, இப்படத்தில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் DQ-வின் முரட்டுத்தனமான தோற்றமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அபிலாஷ். என்.சந்திரன் எழுத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம் பான்-இந்திய நட்சத்திரமான துல்கரின் அடுத்த பிரமாண்ட பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஷ்யாம் ஷஷிதரன் செய்கிறார், ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர், ஆடை வடிவமைப்பு: பிரவீன் வர்மா, நிழற்படம்: ஷுஹைப் எஸ்.பி.கே, ப்ரொடக்ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஷ்வர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு – சதீஷ் குமார், சிவா (AIM)

Zee Studios South is all set to gift fans ‘King of Kotha’ starring Dulquer Salmaan this Onam 2023.

Marking the 11 years of his splendid career in the movie industry, Dulquer Salman’s ‘King of Kotha’ is hitting the screens on Onam 2023. The second-look poster of the big-budget movie is already making a buzz amongst the fans. Similar to his much-loved getup in his debut movie, ‘Second Show’, DQ’s rugged look in the Abhilash Joshy directorial is getting revealed in this poster too.

Produced by Zee Studios and Wayfarer Films, the shooting of ‘King of Kotha’ is progressing in Karaikudi, Tamil Nadu.

Penned by Abhilash N Chandran, the movie is expected to be the next blockbuster of the pan-Indian star. When the cinematography is done by Nimish Ravi, the editing is done by Shyam Shashidaran, Makeup: is Ronex Xavier, Costume Design: is Praveen Varma, the Still: is Shuhaib S.B.K, Production Controller: Deepak Parameshwar. The movie’s music is jointly done by Jakes Bejoy and Shaan Rahman.