Take a fresh look at your lifestyle.

Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி வழங்கும்

113
தமிழ் திரையுலகில் வளரும் இளம் நட்சத்திர நடிகர் சிபி சத்யராஜ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்கள் மாறுபட்ட கதாப்பாத்திரங்களால் ரசிகர்களை அசத்தி வருகிறார். அவரது சமீபத்திய வெற்றிப்படங்கள் அவருக்கு விநியோக வட்டாரங்களில் ஒரு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தற்போது அடுத்ததாக Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி தயாரிப்பில், இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் புரடக்சன் நம்பர் 1 படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 5 இன்று காலை படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இதற்கு முன் இயக்குநர்கள் கணேஷ் விநாயக், ஜெகன் ராஜசேகர் மற்றும் வினோத் DL ஆகியோருடன் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

 

இன்னும் பெயரிடப்படாத இப்படம், ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகிறது. இப்படத்தில் சிபி சத்யராஜ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். அவருக்கு ஜோடியாக எந்தப் பெண் முக்கிய கதாப்பாத்திரமும் இருக்காது, ஆனால் இப்படம் 25 முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நகரும் வித்தியாசமான கதையில் உருவாகிறது.

 

இப்படத்தில் திலீப் (வத்திக்குச்சி புகழ்), கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா (வலிமை), பழைய ஜோக் தங்கதுரை, விஜய் டிவி குரேஷி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

 

தொழில்நுட்ப குழுவில் கார்த்திக் வெங்கட் ராமன் (ஒளிப்பதிவு), சுந்தரமூர்த்தி KS (இசை), அருண் சங்கர் துரை (கலை), சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டிங்), ராஜ் (ஸ்டில்ஸ்), பாரதிராஜா (எக்ஸிகியூட்டிவ் மேனேஜர்), ஆகியோர் பணிபுரிகின்றனர்.

 

சென்னை நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகரின் பல இடங்களில் ஒரே நேர கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.