Take a fresh look at your lifestyle.

‘எமோஜி’ அசத்தலான மனித உணர்வுகளை ஏழு வித வர்ணஜாலங்களில் சுவாரஸ்யத்தோடு ஜொலிக்க செய்திருக்கும் காதல் கவிதை

112

 

ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இணைய தொடர் ‘எமோஜி’. ரமணா ஆர்ட்ஸ் தயாரிப்பில், சென் எஸ்.ரங்கசாமி இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா செளத்ரி ஆகியோர் நடித்துள்ள இத்தொடர் மொத்தம் 7 பாகங்களை கொண்டது.

 

கதையின் நாயகன் ஆதவ் (மகத் ராகவேந்திரா) பொறியியல் பட்டதாரி. கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். அவர் கிரிக்கெட் மட்டை வாங்குவதற்காக விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் ஒரு ஸ்டோருக்குப் போகிறார்.மஹத்தின் காதலியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி ஆண்மைத்தனம் கலந்த அழகியாக கிரங்கடிக்கிறார். அவரை கடந்து செல்பவர்கள் யாரும் அவரை காதலிக்காமல் இருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு தனது கண்களினாலேயே பேசுகிறார்.

 

காமம் கலந்த ரொமான்சில் ஈடுபட்ட இருவரும் சில நாட்களுக்குப் பிறகு பிரேக்அப் ஆகி இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். இருவரின் பிரிவால் மஹத் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.இவர்களின் எதிர் ப்ளாட்டில் தீக்ஷா (தேவிகா சதீஷ்)மற்றும் காதலன் லிவ்விங் டுகெதரில் வாழும் இவர்களும் ஒரு நாள் ப்ரேக் அப்பில் விழுகின்றனர்.

 

அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த நாயகன் மகத் அவரிடமும் காதலை வெளிப்படுத்துகிறான். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

மஹத்தின் மனைவியாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், அழகில் மட்டும் அல்ல நடிப்பிலும் அதிகம் கவனம் பெறுகிறார். கல்லு குடித்துவிட்டு திருமண வீட்டில் அவர் செய்யும் அலப்பறை அவரது அல்டிமேட் நடிப்பு. கோலிவுட்டில் அம்மணிக்கு பெரிய எதிர்காலம் உண்டு.

 

மஹத்தின் நண்பராக நடித்திருக்கும் விஜே ஆஷிக் அளவான நடிப்பால் கவனம் பெறுவதோடு, தனது அளவான பேச்சால் சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்.கதை எழுதி இயக்கியிருக்கும் சென் எஸ்.ரங்கசாமி திரைக்கதையை ஆழமாகவும், காட்சிகளை அழகாகவும் வடிவமைத்திருப்பதோடு, இயல்பான வசனங்கள் மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

 

ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன், ஐடி இளைஞர்களின் பகட்டான வாழ்க்கை, லிவிங் டுகதர் வீடு, விளையாட்டு கூடம், வனத்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள், மரக்கிளையில் கூடாரம் என்று ரிச்சாக, இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறையை அசலாக கொடுத்துள்ளார்.

 

முழுக்க முழுக்க காதலை மட்டுமே சுற்றி சுற்றி கதை நகர்ந்தாலும், காதல் காட்சிகள் மற்றும் காதலர்களின் ஊடல் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுப்பதோடு, மூத்தவர்களையும் ரசிக்க வைக்கும்படி இருக்கிறது. 7 பாகங்களையும் மொத்தமாக பார்த்தாலும் நேரம் போனதே தெரியாதபடி அனைத்து பாகங்களையும் மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் சென் எஸ்.ரங்கசாமி, கணவன் – மனைவி பிரிவு ஏன்?  என்பதை தெரிந்துக்கொள்ள 7 வது பாகத்தையும் எதிர்ப்பார்ப்போடு பார்க்க வைக்கிறார்.

 

“மொத்தத்தில் ‘எமோஜி’ ஜொலிக்க செய்திருக்கும் காதல் கவிதை”

 

Casting : Mahat Raghavendra, Devika Satheesh, Manasa Chowdary, VJ Ashiq, Aadukalam Naren, Priya Dharshi

Directed By : SEN.S. Rangasamy

Music By : Sanath Bharadwaj

Produced By : Ramanaa Arts – A.M Sampath Kumar