Take a fresh look at your lifestyle.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

236

சென்னை :

ரேடியோ சிட்டி FM தொகுத்து வழங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் “RK செல்வமணி”, செயலாளர் “RV உதயகுமார்”, நடிகர் “ரவிமரியா”, இயக்குனர் “நந்தா பெரியசாமி”, இசையமைப்பாளர் “சங்கர் கணேஷ்” ஆகியோர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, அவர்கள் முன்னிலையில் ஜோதி திரைப்படத்தின் பத்மபூஷன் “KJ ஜேசுதாஸ்” பாடிய “அன்பின் வழி”, “பல்ராம்” பாடிய “ஆரிராரோ”, “கார்த்திக்” பாடிய “போவதெங்கே” மற்றும் “ருத்ரம்” பாடல்களை வெளியிட்டனர். மால் முழுவதும் நிறைந்திருந்த பார்வையாளர்கள் பாடல் காட்சிகளை கண்டுகளித்து,கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

நடிகர், திரைக்கதை ஆசிரியர் “இளங்கோ குமரவேல்” கூறியதாவது.
“ஜோதி எனக்கு ரொம்ப பிடித்தமான படம் ஒன்று. அதுக்கு காரணம் இந்த படத்தோட கதை அந்தமாதிரி.திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த படத்தை இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக எடுத்திருக்காங்க. தயாரிப்பாளர் SP ராஜாசேதுபதி மட்டுமில்லாமல் அவர் குடும்பமே இந்த படத்திற்கு வேலை செய்தது AV கிருஷ்ண பரமாத்மா சிறப்பாக இயக்கியிருக்கிறார். வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா எல்லோரும் நல்லா நடிச்சிருக்காங்க.ஜோதி நிச்சயம் வெற்றியடையும்” என்று கூறினார்.
இசையமைப்பாளர் “சங்கர் கணேஷ்” அவர்கள் கூறியதாவது.
“ஜோதி படத்திற்கு சில மேஜிக் நடந்திருக்குனுதான் சொல்லணும். ஆசியாவிலே பெரியது வாகினி ஸ்டூடியோ,அந்த ஸ்டூடியோ உள்ளே நாகிரெட்டி அவர்கள் வீடு இருந்த இடத்தில் ஜோதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது ஜோதி படத்தோட வெற்றியை அடையாளப்படுத்துது. இதுவரை இந்த மாதிரி விழா வேறு எங்கும் நடந்திருக்க முடியாது. அதுபோல கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் பல நடிகர்களை உருவாகிய ஜாம்பவான்கள் அவர்கள் ஆசிவாதமும் கிடைத்திருக்கு, அடுத்து ஆச்சிரியப்பட வேண்டிய விசியம் வழக்கமாக ஜேசுதாஸ் அவர்கள் பைட்ஸ் வீடியோ கொடுக்க மாட்டார். ஆனால் இந்த படத்திற்கு அவர்கள் கொடுத்திருப்பதை பார்க்கும்போது வியப்பா இருக்கு, இதனாலே இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்று கூறினார்.
“கார்த்திக் நேத்தா” அவர்கள் கூறியதாவது.
“நான் அடிப்படையில் ஜோதியை இறைவனாகவும், இறைவனை ஜோதியாகவும் வணங்க கூடியவன். இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா என்னிடம் எனது இறைவனையே தலைப்பாக சொல்லி கதையை சொல்லும்போது நான் மிகவும் நெருக்கமாகி விட்டேன். ஜோதி எனக்கு ரொம்ப பிடித்த தலைப்பாகிவிட்டது. கதையில் சொல்லியிருக்க கூடிய விசியத்தின் சாரமாகத்தான் இந்த படத்தின் பாடல்கள் இருக்கும். ஆணவம் அரவோடு ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று அதை இந்த அன்பின் வழி பாடலில் “சுயநலம் ஏதும் இல்லா உயரத்தில் சேர்ப்பாயப்பா” என்று எழுதியிருக்கிறேன். சுடர் என்றும் கீழ்நோக்கி போவது கிடையாது,மேல்நோக்கியே செல்லும் அதுபோலதான் இந்த ஜோதி படமும் மேல்மேல போய்கிட்டே இருக்கும்” என கூறினார்.
நடிகர் “ரவிமரியா” அவர்கள் கூறியதாவது.
“நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன் என்பதுபோல நான் இந்த படத்துல கலந்துகிட்டேன். இயக்குனரை தாண்டி எந்த காட்சி வேண்டும், எந்த காட்சி வேண்டாம் என்று சொல்லும் உரிமை படத்தொகுப்பாளருக்குதான் உண்டு, அப்படிப்பட்ட படத்தொகுப்பாளரே படத்தை எடுத்திருக்கும்போது படம் எப்படி வந்திருக்கும் என்று இதுலே தெரிகிறது. இந்த படத்திலிருக்கும் பாடல்கள் மயிலிறகு போன்று மெலடியாக ஆரம்பித்து ருத்ர தாண்டவம் ஆடுவதுபோன்று வந்து முடிகிறது. பாடல்களையும் மெலடியாக கொண்டுபோயிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். எப்படி தண்ணித்தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நா என்ற பாடலில் இருந்த அதே கம்பீரம் ஜோதி படத்தின் அன்பின் வழி பாடலில் இருக்கிறது. ஒவ்வொரு நடிகரையும் இந்த படம் அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகும்.” என கூறினார்.
இயக்குனர் “நந்தா பெரியசாமி” அவர்கள் கூறியதாவது.
         “நா இந்த படத்தை பார்த்துவிட்டேன். இந்த படத்தில் மிகப்பெரிய சஸ்பென்ஸ் அமைக்கப்பட்டிருக்கு, அதை சிறப்பாக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.அவர்கள் சிறு அசைவு போயிருந்தாலும் அந்த சஸ்பென்ஸ் உடைந்திருக்கும், அதை இயக்குனர் சிறப்பாக அவர்களிடம் வாங்கியிருக்காரு. அதிர்ஷ்டம் ஆண்டவன் கையில் இருக்கும், ஆசிர்வாதம் நம்ம கையில் இருக்கும் என வசனத்துக்கு ஏற்றவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அனைவரையும் மனப்பூர்வமாக வாழ்த்தக்கூடியவர் அவர் இந்த விழாவிற்கு வந்ததுக்கு மிகவும் சந்தோசமான விசியம்” என கூறினார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் இயக்குனர் “RV உதயகுமார்” அவர்கள் கூறியதாவது.
“திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஜோதியை ஏற்றியிருப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. ஒரு படம் உருவாவது எவ்வளவு கஷ்டம் என்பது ஊமைவிழிகள் படம் முதற்கொண்டு பல படங்களில் பார்த்துள்ளேன். ஊமைவிழி படத்தை ஏழுநாளில் படமாக்க திட்டமிட்டு நான்கு இயக்குனர்களை கொண்டு உருவாக்கினோம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஆஸ்தான நடிகர் கேப்டன் விஜயகாந்த அவர்கள். ஒரு நண்பரை நம்பி ஒரு படத்தை எடுக்கும் பொறுப்பை கொடுத்து, அந்த நம்பிக்கை மாறாமல் ஒரு படத்தை எடுத்து அது மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாக்குவது திரைப்படக்கல்லூரி மாணவர்களால்தான் முடியும் அப்படி இந்த TEAM அமைந்திருக்கிறது. இந்த TEAM யை பார்க்கும்போது மீண்டும் நாங்கள் படங்களை தயாரித்து, இயக்கப்போகிறோம் என்பதை உறுதியுடன் சொல்கிறேன்” என கூறினார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் “RK செல்வமணி” அவர்கள் கூறியதாவது.
“என்னை முதலில் அழைத்தபோது சுமாரான படமாகத்தான் இருக்கும்னு நெனைச்சேன். இங்க வந்து பாத்ததுக்கு அப்புறந்தான் தெரிஞ்சிது இது பெரிய படமா இருக்கு.இப்போது இந்த படத்தின் இசை வெளியீட்டை மிக பிரம்மாண்டமாக இந்த மாலில் வெளியிடப்பட்டிருக்கு. இதுவே இந்த படத்தை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டுபோகும். இதற்கு கொடுத்த ஆதரவு போன்று இப்படம் வெளியீட்டின் போதும் மக்கள் கொடுக்க வேண்டும். மாஸ் ஹீரோ படங்களை ஆதரிப்பது போன்று இதுபோன்ற சிறந்த கதை அம்சங்களை கொண்ட படங்களை ஆதரிக்க வேண்டும். எப்போதும் ஒரு இயக்குனருக்கும் நடிகருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நேரடி தொடர்புகொண்டிருக்க வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் சினிமா ஆரோக்கியமானதாக இருக்கும்” என கேட்டுக்கொண்டார்.
தயாரிப்பாளர் “SPராஜா சேதுபதி” கூறியதாவது.
“இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கு, மொத்தத்துல இந்த படத்தை பத்தி சொல்லணும்னா வருசத்துக்கு 11000 குழந்தைங்களை தொலைத்த இந்திய தாய்மார்களின் கண்ணீர்”
இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா, இசை வெளியீட்டுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றியுரை கூறி விழாவை முடித்தார்.
வின்சன் C.M PRO