Take a fresh look at your lifestyle.

அண்ணே எனக்கு நாலு சினிமா கம்பெனியிலிருந்து சம்பள பாக்கி வரவேண்டியிருக்கு, அதை நீங்களே வசுல் செய்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளாராம் சிவகார்த்திகேயன்

428

முதலமைச்சர் கொரோனா நிவாரணநிதிக்கு சினிமாவிலிருந்து முதல் ஆளாக சிவகுமார் குடும்பத்தினர் நேற்று முதல்வரைச் சந்தித்து 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளனர்.

அஜித் விஜய் போன்ற முன்ணனிகள் இன்னும் முதல்வருக்கு வாழ்த்துகூட சொல்லாத நிலையில் சிவகுமார் பேமலி முந்திக் கொண்டு நிதி கொடுத்துள்ளது இது பல ஹீரோக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

அதுதவிர சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றவர்களிடம் பலர் உதவி கேட்டு தொல்லை செய்து வருவதால் அவர்கள் சென்னையிலேயே இல்லை என்று பதில் வருகிறதாம். சிலர் எப்படியோ சிவகார்த்திகேயனை பிடித்து உதவி கேட்டுள்ளார்களாம். அவரும் ரொம்ப கூலாக அண்ணே எனக்கு நாலு சினிமா கம்பெனியிலிருந்து சம்பள பாக்கி தரவேண்டியிருக்கு, அதை நீங்கள் வசுல் செய்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இன்னும் சில ஹீரோக்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்களாம்.