விடாமுயற்சி திரைவிமர்சனம்
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் விடாமுயற்சி
கதை
அர்ஜுன் (அஜித் குமார்), கயல் (த்ரிஷா) இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். 12 ஆண்டுகள் கழித்து திரிஷாவுக்கு இன்னொருவர் மீது காதல் ஏற்பட்டு விட்டதால் அஜித்தை பிரிய முடிவு செய்கிறார். விவாகரத்துக்கு அப்ளை செய்த நிலையில், விவாகரத்து வழக்கு முடியும் வரை அம்மா வீட்டுக்குப் போறேன் என்று த்ரிஷா சொல்ல, சாலை வழியாக காரில் போகலாம். கடைசி ரோடு ட்ரிப் என திரிஷாவை அஜித் அழைத்துச் செல்லும்போது பேசிக்கொண்டேசெல்ல அஜித்தின் கார் ஆரவ் கார் மீது மோதி ஆக்சிடெண்ட் ஆகி அதிலிருந்து தப்பித்து ஆரவ்விடம் மண்ணிப்பு கேட்கிறார். பிறகு காரில் புறப்படுகிறார். வரும் வழியில் ஆயில் போட காரை அஜித் பெட்ரோல் பேங்கில் நிறுத்தியபோது தமிழர்களான ரக்ஷித் (அர்ஜுன்), அவரின் மனைவி தீபிகா(ரெஜினா கசான்ட்ரா) ஆகியோரை சந்திக்கிறார் த்ரிஷா. அதன்பிறகு வரும் வழியில் அஜித்தின் கார் நடுவில் ரிப்பேர் ஆகி பிரச்சனை கொடுக்கவே கார் பாதி வழியில் நிற்கும்போது அந்த வழியாக பெட்ரோல் பேங்கில் சந்தித்த அர்ஜூன், ரெஜினா வர திரிஷா அவர்களை நிறுத்தி நடந்தவற்றை சொல்ல அஜித் அருகில் உள்ள கஃபேவில் திரிஷாவை இறக்கிவிட்டு கார் மெக்கானிக்குக்கு போன் செய்து இங்கு வர சொல்லவும் என்று அர்ஜூன்,ரெஜினாவிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் அஜித். சிறிது நேரத்திற்கு பிறகு கார் ஒயரை வேண்டும் என்றே பிடுங்கியது அஜித் தெரிந்து கார் ஒயரை சரி செய்து தன் மனைவியான திரிஷாவை தான் சொன்ன கஃபேவுக்கு பார்க்க சென்றபோது தான் திரிஷா கடத்தப்பட்டது தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது திரிஷாவை அர்ஜூன் எதற்காக கடத்தினார்? திரிஷாவை அஜித் உயிரோடோடு மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
அஜித் இந்த வேஸ்ட்டான கதையில் எதற்க்காக நடித்தார் என்று புரியவில்லை. திரிஷா வழக்கமாக நடித்துள்ளார். ஆரவ் ரவுடியாக வந்து போகிறார். அர்ஜூன் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார்.ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அஜர்பைஜானை அழகாக காட்டியிருக்கிறார். அனிருத்தின் இசை சுமார்.
2 ஆண்டுகள் கழித்து அஜித் குமாரின் படம் வருகிறது என்றதுமே ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்க்கத் தொடங்கினர். ஆனால், இயக்குநர் மகிழ் திருமேனி அளித்த பேட்டிகளின் மூலம் இந்த படத்தில் மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனம் என எந்தவொரு கமர்ஷியல் அம்சமும் இருக்காது என்பது ரசிகர்களுக்கு தெளிவாக சொன்னவர் வெற்றி படமாக்க விடாமுயற்ச்சியாக திரைக்கதையில் உழைத்திருக்க வேண்டாமா? உழைத்தது எல்லாமுமே வெட்டி முயற்சியாகி விட்டது. லைக்கா நிறுவனம் இனியும் நடிகர்களை மட்டுமே நம்பாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.