பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். கியாரா அத்வானி, எஸ்.ஜே,சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தமன் இசையமைத்துள்ளார்
கதை
முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்திக்கு(ஸ்ரீகாந்த்) உடல்நலம் சீரியசான கண்டிஷனில் சமுத்திரகனி ஆஸ்பிட்டல் கொண்டுசெல்கிறார். அப்பா இறந்துவிட்டால் முதல்வர் பதவி தனக்குதான் என்று SJ சூர்யாவும்,ஜெயராமும் சண்டையிட்டு கொள்கின்றனர். அதிர்ஷ்டவசமாகபிழைத்து விடுகிறார் முதல்வரான ஸ்ரீகாந்த். உயிர்பிழைத்த பிறகு தன் அமைச்சர்களிடம் தனது கட்சிகாரர்களிடமும் மகன்களிடமும் 4 ஆண்டுகள் ஊழல் ஆட்சி செய்து விட்டோம் இருக்கும் ஒரு ஆண்டில் நல்ல ஆட்சிசெய்ய வேண்டும் என்று கட்டளையிட இந்த சூழ்நிலையில் ராம் நந்தன் (ராம் சரண்) தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார். நேர்மையே வாழ்க்கையாக கொண்ட இந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆவேசம் அதிகம். பதவியேற்ற உடனே ஊழல்வாதிகள் மீது ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்க தொடங்குகிறார். இது ஊழலில் மூழ்கியிருக்கும் அமைச்சர் பாப்பிலி மோப்பிதேவிக்கு (எஸ்.ஜே. சூர்யா) பிடிக்கவில்லை.
எனவே தனது ஒவ்வொரு செயலுக்கும் தடையாக இருக்கும் ராம் நந்தனை ஒழிக்க முடிவு செய்கிறார் மோப்பிதேவி. அதிகாரத்திற்காக தனது தந்தையான ஆந்திர முதல்வர் சத்தியமூர்த்தியையே (ஸ்ரீகாந்த்) கொல்கிறார். ஆனால் மகனை நன்கு அறிந்த சத்தியமூர்த்தி, சாவதற்கு முன் ஒரு வீடியோ பேசியதை சமுத்திரகனி தொலைக்காட்சியில் வெளியிடுகிறார் அந்த வீடியோவிஸ் ராம் நந்தனை தனது வாரிசாக்கி முதல்வராக அறிவிக்கிறார். இது கட்சியில் யாருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக மோப்பிதேவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ராம் நந்தன் முதல்வராக வருவதை தடுத்து நிறுத்தி, தானே முதல்வராகிறார் மோப்பிதேவி. இந்தசூழ்நிலையில் ராம் நந்தனை பழிவாங்க நினைக்கும்போதுதேர்தலை அறிவிக்கின்றனர். தேர்தல் அதிகாரியாக ராம்சரண் நியமிக்கப்பட்டு மோப்பிதேவிக்கு பதிலடி கொடுக்கிறார். அங்கிருந்து இருவருக்கும் இடையே நேரடி போர் தொடங்குகிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும், ஊழல்வாத அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் இந்த போரில் யார் வெற்றி பெற்றார்கள்?
ராம் நந்தன் யார்? அவரது ஃப்ளாஷ்பேக் என்ன? திடீரென்று ராம் நந்தனை ஏன் சத்தியமூர்த்தி முதல்வராக அறிவித்தார்? என்பதே கேம் சேஞ்சர் படத்தின் கதை.
அப்பண்ணா, ராம் நந்தனாக இரட்டை வேடங்களில் நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார் ராம் சரண். ராம் நந்தனின் காதலி தீபிகாவாக நடித்திருக்கிறார் கியாரா அத்வானி. ராம், தீபிகாவின் காதல் டிராக் பெரிதாக கவரவில்லை. அதே சமயம் அப்பண்ணாவின் மனைவி பார்வதியாக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அஞ்சலி. வில்லன் பொப்பிலி சத்யமூர்த்தியாக மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த். பொப்பிலி மொபிதேவியாக சிறப்பாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தமனின் இசை படத்திற்கு பக்கபலம். ஜரகண்டி பாடல் அனைவரையும் கவரும்படி இருக்கிறது. திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் ஷங்கர் படத்தின் முதல் பாதியில் சுவாராஸ்யமானதிரைக்கதை காட்சிகள் அமைக்காததால் படத்தினுடன் ஒன்றிட முடியவில்லை நம்மளால் ஆனால் இடைவேளை டுவிஸ்ட் நன்றாக இருக்கிறது. அது முதல் இரண்டாம் பாதி பரபரப்பாக சொல்லி ரசிக்கவைக்கிறார்இருந்தாலும் ஷங்கரின் ஜென்டில்மேன் இந்தியன் போன்று சுவாராஸ்யமாக ரசிக்கும்படியான படமாக இல்லை.