இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய்,ரோஷினி,ரிதா, மிஷ்கின்,சமுத்திரகனி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் வணங்கான்
கதை
கன்னியாகுமரியில் ஒரு ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் வேலை செய்து வருகிறார் அருண் விஜய், அருண் விஜயால் வாய் பேசவும் காதும் கேட்க முடியாத இளைஞர். அவரது தங்கையின் மீது பாசம் வைத்து வாழ்ந்து வருகிறார். அருண் விஜய் கண்முன்னே தவறு நடந்தால் அடித்து துவம்சம் செய்துவிடுவார். இப்படிபட்ட சூழ்நிலையில் ஆதரவற்ற இல்லத்தில் பெண்கள் குளிப்பதை மூன்று ஆண்கள் பார்த்துவிட அதை அருண் விஜயிடம்சொல்கிறார்கள். அருண்விஜய் மூவரில் இருவரைகொடூரமானமுறையில்கொலை செய்கிறார். தான்தான் அந்த இருவரையும் கொலை செய்தேன் என்று நீதிபதியிடம் சொல்ல காரணம் என்னவென்று நீதிபதி கேட்க காரணத்தை அருண் விஜய் மறைக்கிறார். காரணத்தை கண்டுபிடிக்க ஸ்பெஷல் ஆபிஸராக சமுத்திரகனியைநியமிக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது? அருண் விஜய் செய்த குற்றத்துக்கு தண்டனை கிடைத்ததா? என்பதே படத்தின் சுவாராஸ்யமான கதை.
அருண் விஜய் காது கேட்காதவராகவும் வாய் பேசாதவராகவும் நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்த ரோஷினி கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். இயக்குனர் மிஷ்கின் நேர்மையுள்ள நீதிபதியாகவும், கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனியும் தங்கள் கதாப்பாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். அருண் விஜயின் தங்கை கேரக்டரில் ரிதா சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் இதில் நடித்த அனைவருமே அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.ஜி.வி பிரகாஷின் பாடல்கள் ரசிக்கவைக்கிறது சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
இயக்குனர் பாலா இரண்டாம் பாதியை சுவாராஸ்யமாகசொன்னவர் முதல்பாதியை இன்னும் சிறப்பாக திரைக்கதையமைத்திருக்கலாம். ஒரு முறை பார்க்கலாம். பாராட்டுக்கள்