உபேந்திரா இயக்கத்தில் உபேந்திரா, ரேஷ்மா, சாய்குமார் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் UI.
கதை.
ஏவால் ஆப்பிளை சாப்பிட்டதால் உலகம் எப்படி மாறியது என்பதில் இருந்து கதை தொடங்குகிறது. பின்னர் கல்கி அவதாரம் வந்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு உலகம் எப்படி செல்லும் என கற்பனையாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
ஓர் இரவு நேரத்தில் 11.55 க்கு சத்யா(உபேந்திரா) பிறக்கிறார். 12 மணிக்கு கல்கி(உபேந்திரா) பிறக்கிறார். ஜோஸ்யர் கணிப்புபடி 12 மணிக்கு பிறக்கும் கல்கியால் உலகம் என்ன ஆகப்போகிறது பார் என்று சொல்கிறார். கெட்டவனான கல்கி உபேந்திராவை 11.55 க்கு பிறந்த நல்லவன் உபேந்திரா எப்படி தன் வழிக்கு கொண்டு வருகிறார் என்பதே UI படத்தின் கதை
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உபேந்திரா, நல்லவன், கெட்டவன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ரேஷ்மா உபேந்திராவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். சாய்குமார் சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். விஷுவலாக பிரம்மாண்டமாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வேணுகோபால். அஜனீஷ் லோகேஷின் இசை படத்திற்கு பெரிய பலம்.
மக்களை வைத்து எப்படி அரசியல் பண்ணுகிறார்கள் என்பதையும், திரைப்படங்களில் அதையே காட்டி எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் தைரியமாக கூறியிருக்கிறார் இயக்குநர் உபேந்திரா. . வித்தியாசமான முயற்சியை செய்து இருக்கிறார் உபேந்திரா. ஆனால் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. உபேந்திரா, என்ன சொல்ல வருகிறார் என்பதை கொஞ்சம் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தி சொல்லி இருக்கலாம்.
கடவுள், சாதி, மதம் நம்பிக்கைகளால் மக்களுக்குள் எப்படி எல்லாம் பிரிவினை ஏற்பட்டுள்ளது என்பது காட்சிகள் வாயிலாகவும், வசனங்கள் வழியாகவும் கடத்தியிருக்கும் உபேந்திராவுக்கு ஒரு சல்யூட்.
வித்தியாசமான கதைகளை வித்தியாசமான கோணத்தில் படமாக எடுக்கும் உபேந்திரா இப்படத்தையும் வித்தியாசமா கொடுத்துள்ளார்.அடுத்து என்ன நடக்க போகிறது என நினைக்க வைக்கும் திரைக்கதையில் ஜெயிக்கிறது Ui.
மொத்தத்தில் வித்தியாசமான திரைப்படத்தை தேடி தேடிப் பார்ப்பவர்களுக்கு புது அனுபத்தை இப்படம் தரும். இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
Next Post