தமிழ் வெப் சீரிஸ் பாராசூட் 7 மொழிகளில் வெளியானது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில், ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார். கிருஷ்ணா. கனி. கிஷோர், இயல், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை
தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரத்தில் கதை தொடங்குகிறது, அங்கு சண்முகம் (கிஷோர்) மற்றும் லட்சுமி (கனி திரு) தங்கள் குழந்தைகளான வருண் (சக்தி ரித்விக்) மற்றும் ருத்ரா (இயல்) ஆகியோருடன் வசிக்கின்றனர். வருண், 11 வயது மற்றும் ருத்ரா, 7 வயது, பள்ளி செல்லும் குழந்தைகள் சண்முகம்,(கிஷோர்) சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து பிழைப்பு நடத்துகிறார், பண நெருக்கடியையும் மீறி தனது குழந்தைகளை புகழ்பெற்ற பள்ளியில் சேர்க்கிறார்.
சண்முகம் கண்டிப்பான அப்பா. பையன் சரியா படிக்காததால் அப்பாவைக்கண்டு பயப்படுகிறான். இவன் தவறு செய்தால் கிஷோர் அடிக்கிறார். இதற்கு பயந்தே பையன் பயப்படுகிறான். அண்ணனுக்கு ஆதரவாக தங்கை இருக்கிறாள். “பாராசூட்” என்று குழந்தைகள் அன்புடன் அழைக்கும் தனது தந்தையின் மொபட்டில் சவாரி செய்ய வேண்டும் என்று வருண் கனவு காண்கிறான். ஒரு நாள், அவர்களின் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில், வருண் தன் தங்கை ருத்ராவை மொபட்டில் அழைத்துச் செல்கிறார், அப்போது தாத்தாவை பார்த்ததும் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தாத்தாவை பார்க்க செல்கின்றனர். தாத்தாவை பார்க்கமுடியாமல் திரும்பி வந்து பார்க்கையில் பாராசூட் வண்டி காணவில்லை. என்ன செய்வது வீட்டிற்கு சென்றால் அப்பா அடிப்பாரே என்று பாராசூட் வண்டியை தேட அண்ணனும் தங்கையும் முயற்சி செய்கின்றனர். போலிஸ் நிலையம் செல்கின்றனர். மாலை நேரம் ஆனதும் குழந்தைகள் வீட்டிற்கு வராததால் சண்முகமும் லட்சுமியும் தங்கள் குழந்தைகளைத் தேடத் தொடங்குகிறார்கள்.
அதே நேரத்தில், ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி (கிருஷ்ணா) குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஒரு பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த பைக்கை பறிமுதல் செய்கிறார். அவமானத்தால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பழிவாங்குவதாக சபதம் செய்கிறார்கள். அன்று இரவு திருடன் ஒருவன் சாமர்த்தியமாக திட்டமிட்டு கிருஷ்ணா பறிமுதல் செய்யப்பட்ட பைக்கை காவல் நிலையத்தில் இருந்து திருடி செல்கிறான். அப்போது குழந்தைகள் தேடும் பாராசூட் வண்டியும் கடத்தப்பட. இதை குழந்தைகளான சகதி இயல் பார்த்துவிடுகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது
குழந்தைகள் பாராசூட் வண்டியுடன் வீட்டிற்கு சென்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கண்டிப்பான தந்தையாக கிஷோர் நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கிஷோரின் மனைவியாக கனி சிறப்பாக நடித்துள்ளார். சக்தி ரித்விக், இயல் இருவரும் அண்ணன் தங்கையாக சிறப்பாக நடித்து வெப்சீரிஸ் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள். இயலின் நடிப்பு அசத்தல். கிருஷ்ணா ரோல் அருமை . அந்த ரோலை அழகாக செய்துள்ளார். மற்றும் காளிவெங்கட், ஓம் நாராயணா என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ஒளிப்பதிவு பலம்.
5 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடரை எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் ராசு ரஞ்சித். பார்ட்டுக்கள்.
Next Post