அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் அர்.ஜே பாலாஜி செல்வராகவன் , பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , நட்டி , சானியா ஐயப்பன் , அந்தோனி தாஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சொர்க்கவாசல். கிறிஸ்டோ ஸேவியர் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ் பிரபா, சித்தார்த் விஸ்வநாத் , அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள்
கதை.
1990 களில் மத்திய சிறைச்சாலையை மையப்பகுதியாக கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கிறது சொர்கவாசல். பல்வேறு உண்மை சம்பவங்களை மையமாக ராவான ஒரு படமாக இப்படம் உருவாகியிருக்கிறது.
தள்ளுவண்டி கடை நடத்தி வந்த பார்த்தி (ஆர்ஜே பாலாஜி) செய்யாத கொலை குற்றத்திற்காக சிறைக்குச் செல்ல அங்கே அதைவிட ஏகப்பட்ட கொடுமைகள் அரங்கேறுவதை பார்த்து அதிர்ந்து போகிறார். வட சென்னையையே சிறைக்குள் இருந்துக் கொண்டே ஆளும் தாதா சிகா (செல்வராகவன்)
இனி குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என சிறைச்சாலைக்குள்ளேயே திருந்தும் முயற்சியில் இருக்கிறார் சிகா (செல்வராகவன்) . தான் ஏங்கும் பதவி வேறொரு வெளி நபருக்கு கிடைத்துவிட்டதால் கடுப்பில் இருக்கிறார் சிறைத்துறை அதிகாரியாக இருக்கும் கட்டபொம்மன் (கருணாஸ்). இவர்களைச்சுற்றி சிறைச்சாலைக்குள் நிகழும் ஒரு மரணம், கலவரச் சூழலாக மாற வன்முறை வெடிக்கிறது. அந்த நரகத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் என்ன என்ன நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதே சொர்க்கவாசல் படத்தின் மீதிக்கதை.
இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி இப்படத்தில் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தை எடுத்து சிறப்பாக நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி
சதுரங்கத்தில் தேவைக்கேற்ப உருவம் மாறும் கட்டபொம்மனாக கருணாஸ். சிறப்பாக நடித்துள்ளார்.
1999ல் தமிழ்நாட்டின் சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரம் குறித்த படமாக விரிகிறது சொர்க்கவாசல். காவல்துறை அதிகாரிகள், ரவுடிகள், குற்றவாளிகள் என பலரும் கொல்லப்பட்ட அந்த கலவரத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும் அதிகாரியாக வரும் நட்டியின் நடிப்பு அருமை.
சானியா அய்யப்பன், பாலாஜி சக்திவேல், ரவி ராகவேந்திரா, ஷராஃப் யுதின், ஹக்கிம் ஷா சாமுவேல் ராபின்சன் சந்தானபாரதி என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர்.
கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை பாடலும் ரசிக்கவைக்கிறது
அறிமுக ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது
.தமிழ் பிரபா, அஷ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஸ்வநாத் கூட்டணியில் நிறைய ஷார்ப்பான வசனங்கள் அருமை
நரகத்தில் ராஜாவாக இருக்க போகிறீர்களா இல்லை சொர்க்கத்திற்காக ஏங்கப் போகிறீர்களா? என்ற கேள்வியைக் கொண்டு
சிறைச்சாலை அங்கிருக்கும் மனிதர்கள், அவர்களின் பிரச்னைகள் என வித்தியச ஒன்லைன் பிடித்து அதை
திரைக்கதையமைத்து சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பாராட்டுக்கள்.