Take a fresh look at your lifestyle.

Parari Movie Review

8

எழில் பெரியவேதி இயக்கத்தில் ஹரிசங்கர், சங்கீதா கல்யாண், குருராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ், புகழ் மகேந்திரன் மற்றும் பலர் நடித்து நவம்பர் 22 வெளி
யாகும் படம் பராரி.
இசை ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு ஸ்ரீதர்
கதை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி சமூகத்தை பிளவுபடுத்தும் ராஜபாளையம் கிராமத்தில், மாறனின் (ஹரிசங்கர்) ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வளர்க்கப்படும் ஒரு பன்றி, கிராமத்தின் தெருக்களில் வழிதவறி ஓடுவதை மாறனும் அவரது நண்பர்களும் சேர்ந்து, பன்றியைப் பிடிக்க முயல்கிறார்கள், இது சாதி அடிப்படையிலான சமூகத்தில் பதற்றத்தை எழுப்புகிறது. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள், தன் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாறனுக்கும் அவரது நண்பர்களுக்கும் தொடர்ந்து தொல்லைகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். தந்திரமான அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட ஆதாயம் தேடும் சூழ்ச்சியால் சாதி வேறுபாடுகள் மற்றும் பொருளாதார சவால்கள் பகையை தீவிரப்படுத்துகிறது. அவர்கள் வலையில் மைய நபர்களான மாறனும் ஜெய்குமாரும் சிக்கிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில், ஆதிக்க சாதியைச் சேர்ந்த தேவகிக்கு (சங்கீதா கல்யாண்) மாறன் மீது காதல் உணர்வுகளை வளர்க்கும் போது, மாறனை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். மேலும், மலை உச்சியில் (கொட்டாங்கல் பாறை) உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்ய வந்த மாறன் மற்றும் அவரது சமூகத்தினர்கள் மீது ஆதிக்க சாதி சமூகம் தங்கள் கோபத்தை கட்டவிழ்த்துவிடும் போது அவர்களது கிராம மோதல் தீவிரமடைகிறது.  இந்நிலையில், இரு குழுக்களும் கர்நாடகாவில் உள்ள ஒரு பழச்சாறு தொழிற்சாலைக்கு 3 மாத பணிக்கு செல்லும் போது கதை மாறுகிறது, இங்கு சாதி பதட்டங்கள் மொழி ரீதியான பாகுபாடுகளுக்கு வழிவகுக்கின்றன. அந்த பேக்டரியில் பணிபுரியும் ஒரு சில கன்னட வெறியர்கள் தங்களது மொழி வெறியை அவர்கள் மீது காட்டும் போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக மாறன் கதாபாத்திரத்தில் ஹரி சங்கர் சிறப்பாக நடித்துள்ளார்.
தேவகி கதாபாத்திரத்தில் சங்கீதாவும்  சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தில் நடித்திருக்கும் குரு ராஜேந்திரன், புகழ் மகேந்திரன், பராரி, சாம்ராட் சுரேஷ், ப்ரேம்நாத் என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கிராம வாழ்க்கையையும் கர்நாடகாவின் தொழில்துறை வாழ்க்கையையும் அழகாக காட்டியுள்ளார்.
ஷான் ரோல்டனின் இசை மற்றும் பின்னணி இசையும், சாம் ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பும், ஃபயர் கார்த்தி சண்டைக்காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
ஒரே குல சாமியை வணங்கும் இரண்டு சமூகங்கள். ஒரு சமூகம் மேல் சாதி என்னும் ஒரு சமூகம் கீழ் சாதின்னும் சொல்லப்படுவதும் ரெண்டு சமூகத்துல இருக்கவங்களுமே கூலி வேலை செய்பவர்கள். அவர்களுக்குள் இருக்கும் சாதி மோதல், காதல் இவற்றின் பின்னணியில், பெங்களூருக்கு வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் பற்றியும், சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால  அவலங்களை  பேசுவதோடு, சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும் இந்தச் சமூகத்தை கேள்வி கேட்டு, அறத்தை நிலைநாட்ட, அன்பை விதைக்கும் படமாக படைத்துள்ளார் இயக்குநர் எழில் பெரியவேதி. பாராட்டுக்கள்