வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் மீனாட்சி சௌத்ரி ராம்கி ரித்விக் மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு வெளியாகிகியிருக்கும் படம் லக்கி பாஸ்கர்.
கதை
90களில் தொடங்கும் கதை.. வாக்கிங் முடித்து பால் வாங்க வரும் துல்கர் சல்மானை சுற்றி வளைக்கும் சிபிஐ, அவரை வங்கிக்கு அழைத்துச் சென்று, அவரின் வங்கி கணக்கு குறித்து விசாரிக்கிறது. அதிகாரிகள் தலைசுற்றும் அளவிற்கு, அவருடைய வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. ஒரு வங்கி உதவி பொதுமேலாளர் கணக்கில் எப்படி இவ்வளவு பணம்? ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.
வங்கியில் சாதாரண காசாளராக பணியாற்றும் துல்கருக்கு, மாதம் 6 ரூபாய் சம்பளம், கடனோ 16 ஆயிரம் ரூபாய். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவருக்கு 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் உதவி மேலாளர் பணியிடம் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை. ஆனால், அது வேறு ஒருவருக்குச் செல்கிறது. மனமுடைந்து போன போகிறார் துல்கர், வெளிநாட்டு டிவிக்களை இறக்குமதி செய்ய துல்கரிடம் 2 லட்சம் பண உதவி கேட்கிறார் ராம்கி.துல்கர் ரிஸ்க் எடுத்து வங்கி கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாயை தொடர்ந்து கடன் கேட்டு நச்சரித்து வந்த ரம்கியிடம் தருகிறார் துல்கர்.
ராம்கி
சொன்னபடி, வெளிநாட்டு டிவிகளை இறக்குமதி செய்து, அதில் கிடைத்த லாபத்தையும், பெற்ற தொகையையும் துல்கரிடம் ஒப்படைக்கிறார் . வங்கி லாக்கருக்கு செல்ல வேண்டிய பணத்தை, ராம்கியை கூட்டாளியாக வைத்து, வியாபாரத்தில் இறக்குகிறார் துல்கர். அதனால், துல்கர் சந்தித்தவை என்ன? அதன் பின் நடந்தது என்ன? அது அவருடைய வாழ்க்கையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தியது? என்பதுதான், லக்கி பாஸ்கர் பணத்தின் கதை.
பாஸ்கராக, துல்கர் நடித்திருக்கிறார் என்பதைவிட கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். துல்கர் காதல் மனைவியாக மீனாட்சி செளத்ரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். மகனாக ரித்விக்கும் சிறப்பாக நடித்திருக்கிறார். ராம்கி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
நிமிஸ் ரவியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். ஜீவி பிரகாஷின் பாடலாகள் இசையும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ஹர்சத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலை மையமாக வைத்து, அவரை டச் செய்யாமல், அதன் பின்னணியில் நடந்த வங்கி ஊழலை கதையாக்கி அதை சுவாராஸ்யமாக திரைக்கதையமைத்து எல்லோரும் ரசிக்கும்படி வெற்றி படமாக கொடுத்திருக்கிறார் வெங்கட் அட்லூரி. பாராட்டுக்கள்.
தீபாவளிக்கு குடும்பத்தோடு சென்று பார்க்க கூடிய படம் லக்கி பாஸ்கர்.