சிவா R இயக்கத்தில் வெற்றி, மதுரா,அனு சித்தாரா, ஹரிஷ் பேரடி, விவேக் பிரசன்னா, மதன் தட்சணாமூர்த்தி, கருணாகரன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆலன்
கதை
சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா சம்பவம். அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் ஆலன் படத்தின் கதை
வெற்றி காதலனாக ஆன்மீகவாதியாக என சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகிகளான மதுராவின் நடிப்பும் அருமை. அனு சித்தாராவின் நடிப்பும் ரசிக்கும்படி உள்ளது. ஹரிஷ் பேரடி, விவேக் பிரசன்னா, அருவி மதன், கருணாகரன் என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
விந்தன் ஸ்டாலினின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
மனோஜ் கிருஷ்ணாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார் இயக்குநர் சிவா R. பாராட்டுக்கள்.