CHENDUR FILM
INTERNATIONAL
வழங்கும்,
T D. ராஜா
மற்றும்
D.R.சஞ்சய் குமார்
தயாரிப்பில்…
தனா.S.A
இயக்கத்தில்…
விவேக் – மெர்வின்
இசையில்
நவீன் குமார்.I
ஒளிப்பதிவில்…
E. சங்கதமிழன்
எடிட்டிங்கில்….
விஜய் ஆன்டனி,
ரியா சுமன்,
கெளதம் வாசுதேவ் மேனன்,
சரண் ராஜ்,
ஐஸ்வர்யா தத்தா,
ரெடின் கிங்ஸ்லி,
விவேக் பிரசன்னா,
தமிழ்,
ஆடுகளம் நரேன்
மற்றும்
பலர் நடித்துவெளியாகியிருக்கும் படம்
ஹிட்லர்.
கதை
மதுரை மாவட்டத்தில் ஒரு மலைப்பகுதியில் அடிப்படை வசதி கூட இல்லாமல் வசிக்கும் மக்களின் வாழ்க்கைதான் ஹிட்லர் படத்தின் கதை. விவசாயம் செய்வது, மலைப்பகுதிகளில் வேலை செய்வது என பிழைப்பு ஓட்டும் மக்கள் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டுமெனில் ஒரு ஆற்றை கடந்தே போக வேண்டும். ஆனால், திடீரென ஆற்று வெள்ளம் அதிகமாகி அடிக்கடி பலரும் உயிரிழக்கிறார்கள். அந்த ஆற்றைக் கடக்க அரசு தரப்பில் பாலம் அமைக்கப்படவில்லை. அந்த கிராமத்தில் வசிக்கும் விஜய் ஆண்டனி இந்த விஷயத்தை கையில் எடுக்கிறார். பாலம் அமைக்கப்படாமல் இருக்கும் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?.. விஜய் ஆண்டனி அந்த ஊருக்கு பாலம் கட்டப்பட்டதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் ஆண்டனி நடிப்பிலும் நடனத்திலும் சண்டைகாட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரியா சுமன் அழகாக இருப்பதோடு நன்றாகவும் நடித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி நடிப்பும் அருமை. கௌதம் வாசுதேவன் போலிஸ் கமிஷனராக அவர் பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். அரசியல்வாதியாக வில்லனாக சரண்ராஜ் சிறப்பாக நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், தமிழ், விவேக் பிரசன்னா, ஐஸ்வர்யாதத்தா என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. நவீன்குமாரின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் தனா எடுத்துக்கொண்ட கதையை முதல் பாதியை சுவாராஸ்யமாக சொன்னவர் இரண்டாம் பாதியையும் சுவாராஸ்யமாக சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாராட்டுக்கள்.