சாச்சி இயக்கத்தில் P G முத்தையா ஒளிப்பதிவில்
சதீஷ், ரித்விகா, பாவா செல்லதுரை, வித்யா பிரதீப், அஜய்ராஜ் பாவல் நவகீதன் மறைந்த ராம்தாஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சட்டம் என் கையில்
கதை
கதாநாயகனான சதீஷ் இரவு நேரத்தில் டென்ஷனாக கார் ஒட்டிச்செல்லும்போது குறுக்கே வந்த பைக்கில் மோதி ஆக்ஸிடென்ட் ஆனதால் பைக்கில் வந்தவர் இறக்க அந்த பாடியை தன் காரின் டிக்கியில் மறைத்து காரை ஒட்டிச் செல்லும்மோது போலிஸ் மறிக்க நிற்காமல் சதீஷ் கார் ஒட்டிச்செல்ல வழியில் போலிஸிடம் மாட்டிக்கொள்கிறார். தன் காரின் டிக்கியில் உள்ள பாடி விஷயம் தெரிந்துவிடாதபடி யோசித்து நிற்க Drunk and Drive கேஸில் போலிஸ் பிடிக்க வாக்குவாதத்தில் கோபத்தில் சதீஷ் போலிஸை அடிக்க காவல் நிலையத்துக்கு சதீஷை போலிஸ் அழைத்து செல்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே சுவாராஸ்யமான சட்டம் என் கையில் படத்தின் திரைக்கதை.
சதீஷ் கதையின் நாயகனாக கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். அஜய்ராஜ் பாவல் நவகீதன் இருவரும் சிறப்பாக நபடித்துள்ளார்கள்.மைம் கோபி நடிப்பும் அருமை. மறைந்த ராம்தாஸ் நடிப்பும் அருமை.
ரித்விகாவின் நடிப்பும் அருமை. பாவா செல்லதுரை, வெண்பா என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
M S ஜோன்ஸ் இசையில் பாடலும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. PG முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் சாச்சி கிரைம் திரில்வர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியதற்கு பாராட்டுக்கள்.