கொரட்டால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ், கலையரசன் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம் தேவரா.
கதை
பிரபல தாதாக்கள் இருவர் நடக்கவிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் குண்டு வைக்க இருப்பதாக மும்பை காவல் துறைக்கு தகவல் வருகிறது. இந்த தீவிரவாத கும்பலைத் தேடி ஆந்திரா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் ரத்தினகிரிக்கு ஒரு போலீஸ் தனிப்படை ஒன்று கடத்தல்கார கும்பல் போல நடித்து விசாரணை செய்கிறது. நடுக்கடலில் இருந்து சரக்கு கப்பலில் வரும் கடத்தல் பொருட்களை கைமாற்றுவதில் தேர்ந்தவனான பைராவிடம் ( சைஃப் அலிகான்) உதவி கேட்கிறது போலீஸ். ஆனால் பைரா உட்பட அனைவரும் கடலுக்குள் செல்ல பயப்படுகிறார்கள். இந்த பயத்திற்கு காரணம் தேவரா ( ஜூனியர் என்.டி.ஆர்). கதை பல வருடங்கள் பின்னுக்குச் செல்கிறது.
ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்து விலை மதிப்பற்ற செல்வங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இந்த செல்வங்களை எல்லாம் கப்பலில் இருந்து கடத்தி மறுபடியும் நாட்டிற்கே கொண்டு வருவதைதே லட்சியமாக கொண்டவர்கள் ரத்தினகிரி மலையில் வாழும் நான்கு கிராம மக்கள். சுதந்திரத்திற்கு பிறகு கவனிப்பார் அற்றுபோன பிழைப்பிற்காக கடத்தலில் ஈடுபடுகிறார்கள் தேவரா , பைரா மற்றும் அவனது நண்பர்கள். கடத்தப்பட்ட ஆயுதங்கள் தீவிரவாத செயலுக்கு பயண்படுவது தெரிந்து இனிமேல் கடலுக்கு யாரும் செல்லக்கூடாது என முடிவு செய்கிறார் தேவரா. இது பிடிக்காத பைரா உள்ளிட்ட அவனது சகாக்கள் தேவராவை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இதனால் தேவரா கடலுக்குள் சென்று பதுங்குகிறான். கடலுக்குள் கடத்தலுக்காக செல்லுபவர்கள் பினமாக திரும்பி வருகிறார்கள். ஒரு நாள் தேவரா திரும்பி வருவான் அப்போது அவனை கொலை செய்ய காத்திருக்கிறான் பைரா. தேவராவை வெளியே வரவழைக்க அவன் மகனான வராவை தனது கும்பலுடன் கடலுக்கு அனுப்புகிறான். தேவரா திரும்பி வந்தாரா? அவனை கொல்ல நினைக்கும் பைராவின் ஆசை நிறைவேறியதா? என்பதே தேவரா படத்தின் முதல் பாகத்தின் கதை
அப்பா மகன் என ஜூனியர் Ntr இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிளும் நடனத்திலும் மிரட்டியுள்ளார். ஜான்வி கபூர் மகன் ஜூனியருக்கு ஜோடியாக சிறப்பாக நடித்துள்ளார். அழகாலும் கவர்ச்சியிலும் கவர்கிறார். சைஃப் அலிகான் மிரட்டலாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், கலையரசன் என இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு மிரட்டியிருக்கிறது.
இயக்குநர் கொரட்டால சிவா
மேக்கிங்கில்
காட்டிய அக்கரையை இன்னும் கோஞ்சம் திரைக்கதையில் செலுத்தியிருக்கலாம்.
ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு தேவரா படம் விருந்து.