Crypto Casino slot advice

  1. Eurofortune Casino No Deposit Bonus Codes For Free Spins 2025: Audit firms check casinos to guarantee the fairness of their casino games and to ensure that the best online casinos that payout is fair.
  2. Latest Casino In United Kingdom - The casino makes it easy to send and receive money from your account with a wide choice of payment methods to pick from.
  3. Online Casino No Deposit Codes Uk: Most online casinos available in New Zealand allow you to play free iPhone pokies with no download.

Wheel of fortune progressive slots

21bit Casino Login App Sign Up
The majority of slot titles we reviewed also offer loads of additional bonus features, such as multipliers, wild symbols, cascading reels, free spins, bonus rounds, and scatter symbols.
No Deposit Mobile Bingo Bonus
This is the sticky wild symbol, and it can give as many as three re-spins, leaving the reel the wild symbol appeared on as a sticky reel.
I have kepta constant eye on this and can honestly say you Still need to recredit 300.

Free slots times twelve

Online Roulette Live Free
Instead, you only need to access the website from the browser mobile app.
Uk Bingo Sites With Free Signup Bonus
As well as all of the above, Casino 36 in Melbourne also hosts regular poker tournaments and cash games.
Casino Online For Free

Take a fresh look at your lifestyle.

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம்,  ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

45

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் “டிமான்ட்டி காலனி 2” திரைப்படம்,  ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

அல்லது

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில், “டிமான்ட்டி காலனி 2”  திரைப்படம்,  ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’  ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 10 வருடங்களுக்கு முன் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் திரில், திகில் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த திரைப்படம், ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்கிறது. இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன்  ZEE5 இல் டிமான்ட்டி காலனி திரைப்படத்தைக்  கண்டுகளியுங்கள்.

மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி  2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித் ஆகிய நான்கு நண்பர்களைச் சுற்றி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் பணக்கார போர்த்துகீசிய தொழிலதிபர் ஜான் டிமான்ட்டி என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு, அவர் அனுபவித்த தனிப்பட்ட சோகங்களிலிருந்து உருவாகும் சாபங்கள் மற்றும் அமானுஷ்யங்களால் புனைவுகள் சூழ்ந்த திகில் ஸ்தலமாக இருக்கிறது. இப்படம் பேய் நம்பிக்கையைத் தாண்டி, இயற்கைக்கு அப்பாற்பட்ட பழிவாங்கும் ஒரு கதைக்களத்திற்குள் நம்மை  ஆழமாக இழுத்துச் செல்கிறது, தங்களின் சாபத்திலிருந்து தப்பிக்க  நண்பர்கள்  ஒரு வழியைத் தீவிரமாகத் தேடுகிறார்கள் – அவர்கள் அறியாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அழைத்த  சாபத்தைத் தவிர்க்க முடியாதது என்பதை உணர மட்டுமே முடிகிறது. இந்த இரண்டாம் பாகம் அந்த உலகிற்குள் நம்மை இன்னும் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்கிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில்..,

“இறுதியாக ‘டிமான்ட்டி காலனி 2’  திரைப்படத்தை, அனைத்து ரசிகர்களுக்கும்  ZEE5 மூலம் கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! திரையரங்கு வெளியீட்டின் போது கிடைத்த வரவேற்பு, நாங்கள் எதிர்பாராதது.   இந்த OTT பிரீமியருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதை நான் அறிவேன். இப்போது, அவர்கள் தங்கள் வீட்டில் அமர்ந்து, இந்த திரில், திகில் உலகை ரசிக்க முடியும்.  இப்படத்தின் மீது, ரசிகர்கள் காட்டும் அன்பும், வரவேற்பும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இப்போது அனைத்து ரசிகர்களும் இந்த மாய உலகிற்குள் மீண்டும் பிரவேசிக்கவுள்ளதைக் காண ஆவலுடன் உள்ளேன்.

முன்னணி நடிகர் அருள்நிதி கூறுகையில்..,

“ZEE5 இல் ‘டிமான்ட்டி காலனி 2’ இன் பிரீமியர் காட்சிக்காக நான் ஆவலாக உள்ளேன்! இந்த படம் எங்கள் அனைவரின் ஒருங்கிணைந்த  உழைப்பால், அன்பால் உருவானது.  திரையரங்குகளின் போது எங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.  ஒரு நடிகராக, ஒரு இரண்டாம் பாகத்திற்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எப்போதும் எனக்கு இருக்கிறது, குறிப்பாக முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றபோது, இரண்டாம் பாகத்தில்  மிகப்பெரிய அழுத்தத்தை நாங்கள் உணர்ந்தோம், மேலும் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டோம்.  ஆனால் இப்போது கிடைக்கும் இந்த பேரன்பு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ZEE5 பிரீமியர் மூலம் இப்படம், இன்னும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையும் என்பது மகிழ்ச்சி.  இது எங்களுக்கு ஒரு பெரிய தருணம், மேலும் இந்த திரில் சாகசத்தை, நாங்கள் ரசித்ததைப் போல அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்!”

‘டிமான்ட்டி காலனி 2’  திரைப்படம் தற்போது ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

ZEE5  பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில்  ZEE5 ஐ தொடர :

Facebook – https://www.facebook.com/ZEE5

Twitter – https://twitter.com/ZEE5India

Instagram – https://www.instagram.com/zee5/