Take a fresh look at your lifestyle.

லப்பர் பந்து திரைவிமர்சனம்

9

லப்பர் பந்து
திரைவிமர்சனம்

P R I N C E P I C T U R E S
வழங்கும்,
S.லக்ஷ்மன் குமார்
மற்றும்
A. வெங்கடேஷ்
தயாரிப்பில்.
தமிழரசன் பச்சமுத்து
இயக்கத்தில்..
ஷான் ரொல்டன்
இசையில்..
தினேஷ் புருஷோத்தமன்
ஒளிப்பதிவில்…
G.மதன்
எடிட்டிங்கில்….
ஹரிஷ் கல்யாண்,
அட்ட கத்தி தினேஷ்,
சுவாசிகா,
சஞ்சனா,
ஜென்சன் திவாகர்,
பால சரவணன்,
காளி வெங்கட்,
கீதா கைலாசம்
தேவதர்ஷினி,
டி.எஸ். கே
என மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் லப்பர் பந்து.

கதை

சுவரோவிய கலைஞரான கெத்து (அட்டகத்தி தினேஷ்) ‘முதல் பந்து சாமிக்கு, மத்ததெல்லாம் தனக்கு’ என லப்பர் பந்து போட்டியில் அதிரடி காட்டும் உள்ளூர் சேவாக். ஆனால் அவரது காதல் மனைவிக்கு (சுவாசிகா ) இவரது விளையாட்டு சகவாசம் அறவே ஆகாது. கெத்தின் ஊருக்கு விளையாட வரும் ‘ஜாலி பிரெண்ட்ஸ்’ அணியினர், அவரது அதிரடியால் தோற்றுப்போகிறார்கள். அந்தப் பாரம்பரிய அணியில் முதல்முறையாக விளையாட வாய்ப்பு கிடைத்தும், பந்து வீச வாய்ப்பு கிடைக்காமல் ஏமாறுகிறார் சிறுவன் அன்பு(ஹரிஷ் கல்யாண்). ஆனால் காலங்கள் ஓடத் தனக்கென தனி அணி இல்லாவிட்டாலும் கிடைத்த அணியில் விளையாடி பெயரெடுக்கிறார் ஹரீஷ் கல்யாண். ஊரில் ஜெர்சி கடை வைத்திருக்கும் அன்புக்கு கெத்தின்(தினேஷ்) மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மீது காதல். இந்நிலையில் கெத்து, அன்பு ஆகியோருக்கு இருக்கும் கிரிக்கெட் பகையானது தனிப்பட்ட ஈகோவால் மோதல் ஆகி சண்டையில் முடிகிறது.சண்டை முடிந்த பிறகுதான் தினேஷ் தன் காதலியின் அப்பா என தெரிகிறது. சண்டை விவரம் காதலிக்கு தெரிய
அன்பின் காதல் கைகூடியதா? மோதிக்கொண்ட மாமனார் மருமகன் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அட்டக்கத்தி தினேஷின் இளமை வேடம் திருமண வயதில் பெண்ணுக்கு அப்பா என மனுஷன் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.ஹரிஷ் கல்யாண் நடிப்பும் தினேஷ்க்கு நிகராக நன்றாக நடித்துள்ளார். சுவாசிகா தினேஷ்க்கு மனைவியாக சிறப்பாக நடித்துள்ளார். பால சரவணன், ஜென்சன் திவாகர் இருவரின் சேட்டைகள் சிரிக்கவைக்கிறது. காளி வெங்கட்டின் நடிப்பும் அருமை. மற்றும் இதில் நடித்த
கீதா கைலாசம்
தேவதர்ஷினி,
டி.எஸ். கே என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டில் பேமிலி காதல் கலந்து அழகாக சொல்லி எல்லோரும் ரசிக்கும்படி வெற்றி படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. பாராட்டுக்கள்.