தன்னைப் போன்ற உருவம் கொண்டவர் பாகிஸ்தானி நட்சத்திரம் ஆயிஷா உமர் என கூறுகிறார்
நடிகை சாக்ஷி அகர்வால்
பிரபல தென்னிந்திய நடிகை சாக்ஷி அகர்வால், காலா, விஸ்வாசம், சின்ட்ரெல்லா, டெடி, பகீரா போன்ற படங்களில் நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டவர், அண்மையில் ஒரு ஆச்சரியமிக்க ஒரு நிகழ்வாக, தன்னைப் போன்ற உருவம் கொண்ட பாகிஸ்தானின் பிரபல நடிகை ஆயிஷா உமர் அவர்களை கண்டார்.
இவை அனைத்தும் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் பகிர்ந்தபோது ஆரம்பித்தது, அதில் அவரது சிறந்த ஆளுமை மற்றும் ஃபேஷன் சென்ஸ் வெளிப்படுத்தப்பட்டது. இதைக் கண்ட ஆயிஷா உமரின் ரசிகர்கள் இரண்டு நடிகைகளின் ஒரே மாதிரியான தோற்றத்தை வேகமாக கவனிக்க ஆரம்பித்ததால், கருத்து பகுதி ஆயிஷாவை குறித்த குறிப்புகளாலும் ஒப்பீடுகளாலும் நிரம்பியது. இவ்வளவு வரவேற்பை ஆயிஷா உமரின் இன்ஸ்டாகிராம் கணக்கை அவரது ரசிகர்கள் டேக் செய்ததால்,அவரின் கவனத்திற்கும் வந்தது.
இந்த ஒப்பீட்டை அறிந்து ஆர்வம் கொண்ட ஆயிஷா, இதற்கு மகிழ்ச்சியுடன் பதிலளித்து, இருவரும் இனிமையான குரல் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மிக நகைச்சுவையான திருப்பமாக, இந்த இரு நடிகைகளும் ஒருவருக்கொருவர் எவ்வளவு ஒத்திருக்கிறோம் என்பதை வியப்புடன் கண்டறிந்து, உலகளாவிய ரசிகர்கள் உருவாக்கிய இந்த பிணைப்பினைப் பார்த்து மகிழ்ந்தனர்.
சாக்ஷி அகர்வால் தனது உணர்வுகளைப் பகிர்ந்தார்:
“என் ரசிகர்கள் இதைப் பற்றி சொன்ன போது முதலில் நம்ப முடியவில்லை, ஆனால் நானே ஒப்பீட்டை பார்த்த பிறகு தான் அதிர்ச்சியாகிப் போனேன்! ஆயிஷா மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகை, அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதுபோன்ற விஷயங்கள் எல்லைகளைத் தாண்டி மக்கள் ஒன்றிணைவதை உணர்த்துகிறது”.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களான புல்புலே மற்றும் கராச்சி சே லாகூர், யல்கார் போன்ற படங்களில் நடித்த ஆயிஷா உமர், இந்த புதுமையான சந்திப்பை பற்றிய தனது மகிழ்ச்சியையும் இருவருக்குள்ளான நட்பையும் வெளிப்படுத்தினார்.
இதற்குப் பிறகும் அவர்கள் உரையாடல்கள் தொடர்ந்தது. இருவரும் உண்மையான தகவல்களை பகிர்ந்து கொள்வதுடன், இன்ஸ்டாகிராமில் நேரலை செய்து இதைப் பற்றி அறிவிக்க முடிவெடுத்துள்ளனர். இரு நாடுகளின் ரசிகர்களும் அந்த சிறப்பான தருணத்தை எதிர்நோக்குவதுடன், இந்த இரண்டு ஒரே மாதிரியான தோற்றங்களைக் கொண்ட நட்சத்திரங்களின் மகிழ்ச்சியான உரையாடலுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நட்பு, சமூக ஊடகங்களின் சக்தியை, கலை, பொழுதுபோக்கு மற்றும் பகிரப்பட்ட அனுபவங்கள் என எந்த எல்லைகளைத் தாண்டி எவ்வாறு மக்களை ஒன்றிணைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. சாக்ஷி மற்றும் ஆயிஷா ஆகியோர் வரவிருக்கும் நேரலை ரசிகர்களுக்கு மனம் கவர்ந்த மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரலைக்காகவும், இந்த இரண்டு ஒத்த நடிகைகளின் கதைகளை கேட்கவும் தயாராக இருங்கள்!