AGS என்டர்டெயின்மென்ட்
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்..
கல்பாத்தி S. அகோரம்,
கல்பாத்தி S. கணேஷ்,
மற்றும்
கல்பாத்தி S. சுரேஷ்
தயாரிப்பில்…
வெங்கட் பிரபு
இயக்கத்தில்..
யுவன் ஷங்கர் ராஜா
இசையில்..
சித்தார்தா நோனி
ஒளிப்பதிவில்…
வெங்கட் ராஜன்
எடிட்டிங்கில்
தளபதி – விஜய்,
மீனாக்ஷி சௌத்ரி,
பிரசாந்த்,
பிரபு தேவா,
சினேகா,
லைலா,
மோஹன்,
ஜெயராம்,
யோகி பாபு,
V.T. V. கணேஷ்,
பிரேம் ஜி,
அஜ்மல்,
வை பவ்,
அஜய் ராஜ்,
அர்விந்த் ஆகாஷ்
சிறப்பு தோற்றங்கள்:-
மறைந்த கேப்டன் விஜயாந்த் (AI)
சிவகார்த்திகேயன்
என பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
தி கிரேட்டஸ்ட் ஆஃப்
ஆல் டைம்
கதை
தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி குழுவில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் பணிபுர்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு தலைவராக ஜெயராம் இருக்கிறார். பட ஒப்பனிங்கில் தீவிராத தலைவனான மோகனை இரயில் பயணத்தில் விஜய் அண்ட் கோ தாக்குதல் நடத்தும்போது மோகன் குடும்பம் இறக்கிறது. இதனால் விஜய் மகனை கடத்தி வந்து வளர்த்து விஜய் அண்ட் கோவை கொலை செய்ய சொல்கிறார். விஜய் மகனான விஜய், விஜய் மற்றும் விஜய் அண்ட்கோவான ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரை கொலை செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் இரட்டை வேடத்தில் அப்பா மகனாக சிறப்பாக நடித்துள்ளார். மேலும் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் அசத்துகிறார். மனைவியாக சினேகா சிறப்பாக நடித்துள்ளார். லைலா, மீனாட்சி சௌத்ரி நன்றாக நடித்துள்ளார்கள். ஜெயராம், பிரசாந்த் பிரபு தேவா,அஜ்மல், யோகிபாபு, பிரேம்ஜி, வைபவ் என இதில் நடித்திருக்கும் எல்லோரும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். திரிஷ் ஒரு பாடலுக்கு நடமாடி ரசிக்கவைக்கிறார். நட்புக்காக சிவகாராத்திகேயன் வீணடிக்கப்பட்டிருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கிறது. பிண்ணனி இசை சுமார் ரகம்.சித்தார்தா நோனியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
விஜய் நல்ல கதைகளை கேட்டுத்தான் படம் பண்ணுவார்.
சமீப காலமாக விஜய் கதையை கேட்கிறாரா? என்ற கேள்வியே எழுகிறது. விஜய்க்காக படம் ஒடுகிறது என்பதற்காக
பெரிய கம்பெனி வெற்றிபெற்ற இயக்கநர் என்று முடிவு செய்து படம் பண்ணுகிறார். நல்ல கதைகளை கோட்டைவிடுகிறார். பேமிலியுடன் ரசிக்கும்படியான கதைகளை கொடுக்காமல் Goat மாதிரி படங்களில் நடிப்பதை தவிர்த்து நல்ல கதை கேட்டு நடிக்கவேண்டும்.
மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றி படங்களை கொடுத்த வெங்கட் பிரபு விஜயை வைத்து நல்ல திரைக்கதையமைக்க வேண்டாமா?இப்படத்தை 3 மணிநேரத்தில் எடுத்து நமது பொறுமையை சோதிக்கவைக்கிறார். படத்தை டிரிம் செய்வது நல்லது.
விஜய் படம் என்றாலே சமீபகாலமாக கல்லா கட்டுகிறது. அந்த வரிசையில் இந்த கோட்டும் கல்லா கட்டும்.