சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி மாநில தகவல் ஆணையத்திற்கு புகாரளித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 18(1)ன் கீழ் தமிழ்நாடு அரசு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை பொது தகவல் அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரி சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி மாநில தகவல் ஆணையத்திற்கு புகாரளித்துள்ளார்.
சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி இந்திய குடிமகன் என்ற முறையில் தமிழகம் முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக மது போதையினால் எத்தனை நபர்களுக்கு கை, கால்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது, கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது, கல்லீரல் செயலிழந்துள்ளது, சிறு மூளை பாதிக்கப்பட்டுள்ளது,
உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது, உடல் உறுப்புகளை இழந்துள்ளனர், மரணமைந்துள்ளனர்
என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் வழங்கும் படி கடந்த 27.07.2024 அன்று தமிழக சுகாதார துறை பொது தகவல் அலுவலருக்கு மனு அளித்துள்ளார். மனுவை பெற்று கொண்டு தமிழ்நாடு அரசு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் (எம்.2) துறை கடித எண்.8086055/எம்.2/2024-1, நாள்:08.08.2024 ஆவணம் மூலமாக மேற்கண்டுள்ள தகவல்கள் தற்போது அதிகார அமைப்பில் இல்லை என்று பொது தகவல் அலுவலர் தகவல் அளித்துள்ளார். ஆகையால் கோபி காந்தி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் பொது தகவல் அலுவலர் மீது புகாரளித்துள்ளார். இதுகுறித்து கோபி காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில் கூறியுள்ளதாவது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த 2005ம் ஆண்டு பொது மக்கள் அரசு ஊழியர்கள் சரியான முறையில் பனி செய்கிறார்களா? ஊழல் செய்கிறார்களா? என்று அறிந்து கொள்வதற்காக இந்திய மக்களுக்கு பணி செய்வதற்காக மக்கள் வரி பணத்தில் நேரிடையாக சம்பளம் வழங்கப்பட்டு ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பொது தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இச்சட்டத்தின் மூலம் அரசாங்கம் சார்ந்த பணியின் விவரங்களை பொது மக்கள் கேட்டறிந்து கொள்ள முடியும், ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசாங்கம் சரியான முறையில் செயல்பட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நன்கு படித்து அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பொது தகவல் அலுவலர்கள் பொது மக்களை அலட்சியமாக எண்ணி சரியான தகவல்களை வழங்குவதில்லை சரியான பதிலளிக்காத பொது தகவல் அலுவகர் மீது 18(1)ன் கீழ் புகாரளிக்கும் விதிமுறை உள்ளது. அதன்படி நான் தமிழ்நாட்டில் சுமார் ஐம்பது லட்சம் பொது மக்கள் அரசு மருத்துவமனையின் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அப்படி இயங்கி வரும் துறையின் தகவல்களை தமிழ்நாடு அரசு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் (எம்.2) துறை பொது தகவல் அலுவலர் தற்போது அதிகார அமைப்பில் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் மாநில தகவல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 18(1)ன் கீழ் தமிழ்நாடு அரசு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை பொது தகவல் அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்துள்ளேன். இவ்வாறு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில் கூறியுள்ளார்.