Take a fresh look at your lifestyle.

விஜய்சேதுபதி-சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பார்ட் 2′ படத்தின் கர்நாடக திரையரங்க உரிமையை ஏவி மீடியா வாங்கியுள்ளது!

27
விஜய்சேதுபதி-சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பார்ட் 2′ படத்தின் கர்நாடக திரையரங்க உரிமையை ஏவி மீடியா வாங்கியுள்ளது!
தமிழ்த் திரைப்படங்கள் எப்போதுமே மொழி போன்ற தடைகளைக் கடந்து கன்னட பார்வையாளர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வரும் உணர்வுப்பூர்வமான கதைக்களங்கள் பிறமொழி பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியான ஒரு படமாக வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வெளியான ‘விடுதலை 1’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஏவி மீடியா, விஜய்சேதுபதி மற்றும் சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் கர்நாடக திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
ஏவி மீடியாவின் வெங்கடேசன் இதுபற்றி பேசும்போது, “திரைப்படங்களை  வாங்கி, வெளியிடுவதை நாங்கள் துல்லியமாகவும் கச்சிதமாகவும் வெற்றிகரமாகவும் செய்து வருகிறோம். ‘விடுதலை 2’ போன்ற ஒரு திரைப்படம் எங்களை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது. இந்தப் படத்தைப் பற்றி நாம் கேள்விப்படுவதை விட பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பார்வையாளர்களுக்கு உள்ளது. ஒரு விநியோக நிறுவனமாக, இந்தப் படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்” என்கிறார்.
‘விடுதலை 1’ படத்திற்குப் பிறகு, நடிகர்கள் – விஜய்சேதுபதி மற்றும் சூரி இருவரும் ‘மகாராஜா’ மற்றும் ‘கருடன்’ என அவர்களின் சமீபத்திய படங்களின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த இரண்டு படங்களும் கர்நாடகாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ரஜினியின் ‘ஜெயிலர்’, ‘விடுதலை ‘1, ‘சர்தார்’, ‘மகாராஜா’, ‘கருடன்’, ‘கல்கி’ மற்றும் தனுஷின் ‘ராயன்’ ஆகிய படங்களை வெளியிட்ட ஏவி மீடியா ‘விடுதலை 2’ படமும் தங்களுக்கு லாபகரமான படமாக இருக்கும் என்று நம்புகிறது. 
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘விடுதலை 2’ படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் அற்புதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. 
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளார். 
படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இரண்டாம் பாகத்தில் நடிகர்கள் மஞ்சு வாரியர் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
*தொழில்நுட்ப குழு:* 
இயக்குநர் – வெற்றிமாறன்,
இசை – இளையராஜா,
ஒளிபதிவு- ஆர். வேல்ராஜ் ,
கலை இயக்குநர் – ஜாக்கி,
எடிட்டர் – ராமர், 
ஆடை வடிவமைப்பாளர் – உத்ரா மேனன்,
ஸ்டண்ட் – பீட்டர் ஹெய்ன் & ஸ்டண்ட் சிவா,
ஒலி வடிவமைப்பு – டி. உதய குமார்,
விஎஃப்எக்ஸ் – ஆர். ஹரிஹரசுதன்
நிர்வாகத் தயாரிப்பாளர் – ஜி. மகேஷ்,
இணைத்தயாரிப்பாளர் – வி.மணிகண்டன்,
தயாரிப்பாளர் – எல்ரெட் குமார்