5 மொழிகளில், ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 14 தொடர்கள் மற்றும் திரைப்படங்களோடு ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவிக்கிறது
5 மொழிகளில், ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 14 தொடர்கள் மற்றும் திரைப்படங்களோடு ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவிக்கிறது
ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் வரவுள்ள பிரைம் டே 2024க்கு முன்னதாகவே, புதிய சேனல்கள், பிரைம் வீடியோ சேனல்களின் பார்ட்னர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாக்களில் சிறப்பான தள்ளுபடிகள் இவற்றிற்கு மேலாக, சமீபத்திய மற்றும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அனுபவிக்க முடியும்.
மும்பை—ஜூலை 3, 2024— இந்தியாவில் பெறும் ஆதரவுடன் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான ப்ரைம் வீடியோ, ஜூலை 20 மற்றும் 21 பிரைம் டே -2024ஐ முன்னிட்டு தனது பிரைம் உறுப்பினர்களுக்காக 5 மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 14 இந்திய மற்றும் சர்வதேச தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் அற்புதமான தேர்வை வெளியிடவுள்ளது. அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மெகா இந்தியன் ஒரிஜினல் தொடரான மிர்சாபூர் (இந்தி) சீசன்-3 மிர்சாபூரின் சிம்மாசனத்திற்காக மேலும் தீவிரமடைந்த போர்களத்துடன் ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. உலகளாவிய பிளாக்பஸ்டர் ஒரிஜினல் தொடரான தி பாய்ஸ் (ஆங்கிலம்) சீசன் 4-ன் புதிய எபிசோடுகள் பிரைம் டே வரை ஒவ்வொரு வாரமும் வெளிவரும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பிளாக்பஸ்டர் நிகழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டி இவ்விரண்டு தொடர்களும் பல இந்திய மொழிகளில் சப்டைட்டில் மற்றும் டப் செய்யப்பட்டு வெளிவருகின்றது.
ரோஜர் ஃபெடரரின் தொழில்முறை விளையாட்டு களத்தின் இறுதி பன்னிரண்டு நாட்களைப் பின்தொடரும் ஃபெடரர்: ட்வெல்வ் ஃபைனல் டேஸ் (ஆங்கிலம்) ஆவணப்படம், டிஸ்டோபியன் த்ரில்லர் சிவில் வார் (ஆங்கிலம்), சமூக நாடகம் PT சார் (தமிழ்), விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட நாச் கா குமா (மராத்தி), ஹீஸ்ட் காமெடியான கம் கம் கணேஷா (தெலுங்கு), வரலாற்று கதை ஒரிஜனல் தொடர் மை லேடி ஜேன் (ஆங்கிலம்), நகைச்சுவை களம் கொண்ட சர்மாஜி கி பேட்டி (இந்தி), மற்றும் அதிரடி நகைச்சுவை பொழுதுபோக்குச் சித்திரமான இங்க நான் தான் கிங்கு (தமிழ்) போன்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொடர்களுடன் பிரைம் வீடியோவில் பிரைம் டே கொண்டாட்டங்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. இந்த அற்புதமான திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் அனைத்தும் இப்போது பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கிறது.
கொண்டாட்டங்களை மேலும் தொடரும் வண்ணம் பிரைம் வீடியோ ஆக்ஷன் த்ரில்லர் படமான கருடன் (தமிழ்), ரொமான்ஸ்காமெடி ஸ்பேஸ் கேடட் (ஆங்கிலம்), மற்றும் துப்பறியும் காமெடி மை ஸ்பை: தி எடர்னல் சிட்டி (ஆங்கிலம்) ஆகியவையும் திரையிடப்படுகிறது.
மேலும் சிறப்புச் சேர்க்கும் நோக்கில், பிரைம் டேவை நோக்கிய பயணத்தின் பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த அனிம் உள்ளடக்கத்தை அனுபவிக்க வேண்டி பிரைம் வீடியோ சேனலில் க்ரஞ்சிரோல்-ஐயும் பிரைம் வீடியோ அறிமுகப்படுத்தியுள்ளது, கூடுதல் சந்தாவாக மாதத்திற்கு 79 ரூபாய் செலுத்தி இதனை ரசிக்கலாம். கூடுதலாக, MGM+, Lionsgate Play, Discovery+, Sony Pictures Stream, hoichoi, ManoramaMAX, Mubi, VROTT போன்ற பிற பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளின் ஆட்-ஆன் சந்தாக்களை வாங்கும் போது 50% வரை தள்ளுபடியை அனுபவிக்கும் வசதியும் பிரைம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரைம் வீடியோ சேனல்கள் மூலம், பிரைம் உறுப்பினர்கள் அதிக நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்கலாம், எவ்வித சிக்கலும் இன்றி உள்நுழைவு செய்யலாம் மற்றும் பில்லிங் வசதியை அனுபவிக்கலாம். அதோடு, எக்ஸ்-ரே, ஆஃப்லைனில் பார்ப்பதற்கான சிங்கிள் வாட்ச்லிஸ்ட் மற்றும் டவுன்லோட் லைப்ரரி போன்ற போன்ற அனைத்து பிரைம் வீடியோ அம்சங்களையும் பல்வேறு OTT தளங்களிலும் அனுபவிக்கலாம்.
வெளிவரும் தேதிகளுடன் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் வரிசை:
காட்சி/திரைப்படம் அசல் மொழி வெளிவரும் தேதி
தி பாய்ஸ் (சீசன் 4) ஆங்கிலம் ஜூன் 13, 2024 துவங்கி ஜூலை 18, 2024 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய அத்தியாயங்களுடன்
பெடரர்: டுவெல்வ் ஃபைனல் டேய்ஸ் ஆங்கிலம் 20 ஜூன் 2024
கம் கம் கணேஷா தெலுங்கு 20 ஜூன் 2024
PT சார் தமிழ் 21 ஜூன் 2024
நாச் கா குமா மராத்தி 21 ஜூன் 2024
மை லேடி ஜேன் ஆங்கிலம் 27 ஜூன் 2024
சிவில் வார் ஆங்கிலம் 28 ஜூன் 2024
ஷர்மாஜி கி பேட்டி ஹிந்தி 28 ஜூன் 2024
இங்க நான் தான் கிங்கு தமிழ் 28 ஜூன் 2024
சத்யபாமா தெலுங்கு 28 ஜூன் 2024
கருடன் தமிழ் 3 ஜூலை 2024
ஸ்பேஸ் கேடட் ஆங்கிலம் ஜூலை 4, 2024
மிர்சாபூர் (சீசன் 3) ஹிந்தி 5 ஜூலை 2024
மை ஸ்பை: தி எடெர்னல் சிட்டி ஆங்கிலம் 18 ஜூலை 2024
அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரைம்-டே நாட்களை அமேசன் இந்தியா ஜூலை 20 & 21, 2024 அன்று மீண்டும் கொணர்கிறது. அதிக அளவிலான சேமிப்புகள், சிறந்த டீல்கள், முன்னணி பிராண்டுகள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் வழங்கும் புதிய தயாரிப்புகள், பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு மற்றும் பலவற்றின் மூலம் மகிழ்ச்சியைக் கொண்டாட பிரைம் உறுப்பினர்கள் இங்கு தயாராகிறார்கள். பிரைம் டேயின் போது, ICICI வங்கி கிரெடிட்/டெபிட் கார்டுகள், SBI கிரெடிட் கார்டுகள் மூலம் மற்றும் ICICI வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளில் EMI பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தும்போது 10% அதிகம் சேமிக்க இயலும். அமேசான் பிரைம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அற்புதமான ஷாப்பிங், சேமிப்பு மற்றும் பொழுதுபோக்கு, இணை-பிராண்டான ICICI கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு வரம்பற்ற 5% கேஷ்பேக், பிரத்யேக டீல்களுக்கான அணுகல், பிரைம் டே உட்பட எங்களது ஷாப்பிங் நிகழ்வுகளுக்கான முன்கூட்டிய மற்றும் பிரத்தியேக அணுகல் இவை அனைத்தையும் ஒரே உறுப்பினர் சந்தாவில் பெறமுடியும். இன்னும் உறுப்பினராகவில்லையா? இலவச மற்றும் விரைவான டெலிவரி, விருது பெற்ற திரைப்படங்கள் & டிவி நிகழ்ச்சிகளுக்கு வரம்பற்ற அணுகல், 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களுக்கான வரம்பற்ற அணுகல், அமேசான் மியூசிக் மூலம் விளம்பரமில்லா மற்றும் போட்காஸ்ட் எபிசோடுகள், பிரைம் ரீடிங் மற்றும் அணுகலுடன், 3,000 க்கும் மேற்பட்ட மின் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் காமிக்ஸ்கள், பிரைம் கேமிங் உட்கின் பலன்களுடன் மாதாந்திர இலவச கேம் உள்ளடக்கம் போன்ற பிரைம் பலன்களைப் பெற ஆண்டுக்கு ₹1,499 செலுத்தி ப்ரைம் ஆனுவல், ஆண்டுக்கு ₹799-இல் பிரைம் லைட் மற்றும் ஆண்டுக்கு ₹399 இல் பிரைம் ஷாப்பிங் எடிஷன் போன்ற விருப்பமான சந்தாவைத் தேர்ந்தெடுக்க amazon.in/prime தளத்துக்கு விரையுங்கள்.,
About Prime Video
Prime Video is a one-stop entertainment destination offering customers a vast collection of premium programming in one application available across several devices. On Prime Video, customers can find their favourite Indian and international original series, movies, TV shows, and more, across multiple languages – including Indian-produced Original series like Indian Police Force, Farzi, The Family Man, Mirzapur, Dhootha, Jubilee, Dahaad, Made in Heaven, Panchayat, Suzhal – The Vortex, Inspector Rishi, Poacher, Paatal Lok, Rainbow Rishta, Wedding.con; Original movies like Maja Ma, Ammu, Mast Mein Rehne Ka; popular global Originals like Citadel, The Lord of The Rings: The Rings of Power, Fallout, Reacher, The Boys, The Wheel of Time, Road House, The Idea of You; some of the biggest post-theatrical films; direct-to-service films such as Shershaah, Soorarai Pottru, Sardar Udham, Bawaal, Gehraiyaan, Jai Bhim, Jalsa, Sherni, Narappa, Sarpatta Parambarai, Kuruthi, Joji, Malik, Pippa, #HOME, and many more of such titles. Additionally, Prime Video’s video entertainment marketplace, offers customers programming from partners such as discovery+, BBC Player, Lionsgate Play, FanCode, ManoramaMAX, hoichoi, Anime Times, Sony Pictures – Stream, to name a few, via Prime Video Channels add-on-subscriptions, as well as the option to rent movies, regardless of whether customers have a Prime membership or not, via Movie Rentals on Prime Video Store. Customers can also go behind the scenes of their favorite movies and series with exclusive X-Ray access. Prime Video is one benefit among many that provides savings, convenience, and entertainment as part of the Prime membership. For more info visit www.amazon.com/primevideo.